14 [செப்டம்பர், 2020 கரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட சுமார் 249 குடும்பங்களைத் தத்தெடுத்ததோடு, தன்னுடைய சொந்த சேமிப்பு நான்கறை லட்சத்தையும் அவர்களுக்காகவே செலவிட்டிருக்கிறார் ஹரிகிருஷ்ணன். கடந்த மார்ச் 24 ஆம் தேதி தொடங்கிய கரோனா ஊரடங்கு, நான்கைந்து கட்டங்களைக் கடந்து, இப்போதும் சில தளர்வுகளுடன் நீடித்து வருகிறது. பெரும்பாலும் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள இந்தக் கட்டத்திலும்கூட ரயில் போக்குவரத்து தொடங்கப்படாததால், ரயில் வணிகம் செய்து வாழும் பெரும்பாலான பார்வையற்றோர் குடும்பங்கள் இன்னமும் துன்பத்தில் […]
Category: relief pension
10 ஜூலை, 2020 கரூர் காவல்த்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வருபவர் ஜெயபாலன். பார்வை மாற்றுத்திறனாளியான இவரின் நொடிநேர சமூகப்பணி அனைவரின் பாராட்டையும் பெற்றிருக்கிறது. கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்கிற 70 வயது மாற்றுத்திறனாளி தனது அடையாள அட்டை தொலைந்துவிட்டதால், அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு அறிவித்துள்ள ரூ. 1000 நிவாரணத்தைப் பெறமுடியாமல் தவித்து வந்திருக்கிறார். தனக்குப் புதிய அடையாள அட்டை வழங்கும்படி வட்டாட்சியரிடமும் மனு கொடுத்துள்ளார். இதற்கிடையே, மாரியப்பனுக்கு நிவாரணம் வழங்க மறுத்த கிராம நிர்வாக […]
ஜூன் 22, 2020 கரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அடையாள அட்டை வைத்திருக்கும் சுமார் 13 லட்சத்து 35 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1000 நிவாரணமாக வழங்கப்படும் என்கிற முதல்வரின் அறிவிப்பினைத் தொடர்ந்து அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்த நிவாரணத்தை மாவட்ட வாரியாகப் பகுத்து வழங்கிட, அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று, இரண்டு 500 ரூபாய் நோட்டுகளாக இந்த நிதி வழங்கப்பட வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் […]
ஜூன் 21, 2020 கரோனா ஊரடங்கின் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1000 வழங்கப்படும் என்கிற முதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து அதுகுறித்த அரசாணை நேற்று, 20.ஜூன்.2020 வெளியிடப்பட்டது. அந்த அரசாணையில், மொத்தம் 13 லட்சத்து 35 ஆயிரத்து 219 மாற்றுத்திறனாளிகளுக்கு, ரூ. 133 கோடியே 52 லட்சத்து 19 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நிதியை மாவட்டவாரியாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்பேற்று வழங்குவார்கள் எனவும், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாற்றுத்திறனாளிகளுக்கான […]
20 ஜூன், 2020 தமிழகத்தில் மொத்தம் 13 லட்சத்து 35 ஆயிரத்து 219 பேர் அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகள் என மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் பட்டியல் வழங்கியுள்ளார்.கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ. 1000 வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் மொத்தம் 13 லட்சத்து 35 ஆயிரத்து 219 மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வைத்திருப்பதாகவும், எனவே அவர்களுக்கு நிவாரணமாக […]
படக்காப்புரிமை டைம்ஸ்நவ் நன்றி டைம்ஸ் நவ்: சென்னை பல்லாவரத்தின் புனித செபாஸ்டின் குடியிருப்பில் வசிக்கும் பதினெட்டு பார்வையற்ற குடும்பங்கள் ஒன்றிணைந்து ஓர் இசைக்குழுவை நடத்திவருகின்றனர். தற்போதைய கரோனா ஊரடங்கு காரணமாக, சமூக, கலாச்சார மற்றும் பல்வேறு மத நிகழ்வுகளுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளதால், அனைவருமே வருமானம் ஏதுமின்றி, வீட்டின் நான்கு சுவர்களுக்குள் முடங்கியிருக்கின்றனர். குழுவில் ஒருவரான தண்டபாணி, தற்போது அமல்ப்படுத்தப்பட்டிருக்கும் “ஊரடங்கின் காரணமாக நாங்கள் வருமானம் இழந்து தவித்து வருகிறோம். சாதாரண நாட்களில் ஒரு மாதத்தில் 15 கச்சேரிகள் கிடைத்துவிடும். […]
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்மு.யுவராஜ் சென்னைஆணை பெற்று 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் உதவித் தொகை கிடைக்காததால் மாற்றுத்திறனாளிகள் தவித்து வருகின்றனர்.தமிழகம் முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். 40 சதவீதம் ஊனம் அடைந்த மாற்றுத்திறனாளி களுக்கு வருவாய் துறை மூலம் மாதம்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகையைப் பெற குடும்ப அட்டை, ஆதார், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, வங்கி கணக்குப் புத்தக நகல், புகைப்படம் […]
