20 ஜூலை, 2020 நவீன்குமார் விருதுநகர் மாவட்டம் ஜோகில்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்புப் படித்த உடல்ச்சவால் மாற்றுத்திறனாளியான நவீன்குமார், அரசுப் பொதுத்தேர்வில் 600க்கு 572 மதிப்பெண்கள் பெற்று சாதனைபடைத்திருக்கிறார். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம் கல்குறிச்சிக்கு அருகில் இருக்கிறது தோணுகால் கிராமம். அந்த கிராமத்தில் வசிக்கும் சரவணபாண்டி நாகரத்தினம் தம்பதியின் மூத்தமகனான நவின்குமார், ஏழு மாதக் குழந்தையாகப் பிறந்தார். இதன் காரணமாக, வலது கால் மற்றும் வலது கை செயலிழந்ததோடு, பேச்சுத்திறனிலும் பாதிப்பு ஏற்பட்டது. தனது […]
