31 ஆகஸ்ட், 2020 “நமக்கான பிரச்சனைகளை நமக்குள்ளேயே பேசிக்கொண்டிருப்பது வீண் வேலை.” இது ஜூம் வழியே நடக்கும் கருத்தரங்குகள் குறித்து, ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் துணைத்தலைவர் சுரேஷ்குமார் அவர்கள் சொல்லும் ஒருவரி கமெண்ட். “என்ன செய்யலாம்? உங்க பிரச்சனையைச் சொல்ல கமிஷ்னரைக் கூப்பிடுவோமா?” என பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் பொதுச்செயலர் மணிக்கண்ணன் கொழுத்திப்பொட, பற்றிக்கொண்டது ஆக்கபூர்வ அக்கினி; நிகழ்ந்தேறியது ‘கரோனா காலத்திற்குப் பின் பார்வை மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளவிருக்கும் சிக்கல்களும் அதன் தீர்வுகளும்’ என்ற […]
Category: livelihood
31 ஆகஸ்ட், 2020 கரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அடையாள அட்டை வைத்திருக்கும் 13 லட்சத்து 35 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1000 வழங்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு மாற்றுத்திறனாளிகளிடம் கொஞ்சம் ஆசுவாசத்தை ஏற்படுத்தியது. ஆனால், இந்தத் தொகையானது தமிழகம் முழுவதும் எவ்வாறு வினியோகிக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு அனைத்துத் தரப்பினரிடமும் மேலோங்கியிருந்தது. முதல்வரின் அறிவிப்பினைத் தொடர்ந்து அதற்கான அரசாணையும், நிவாரணத்தை வழங்கிட உரிய வழிகாட்டு நெறிமுறைகளும் அடுத்தடுத்த நாட்களில் வெளியாயின. இரண்டு 500 […]
31 ஜூலை, 2020 கோமதி குப்புசாமி தனது மேல்நிலைக் கல்வியின் இறுதி நாட்களில் அந்தப் பெண்ணுக்கு ஒரு அழைப்பு வருகிறது. தன்னார்வ வாசிப்பாளராக ஒருமணி நேரம் வந்துவிட்டுப் போகவேண்டும். சரி போகலாம் என்று புறப்பட்டவர்தான் இன்னும் திரும்பவே இல்லை. அவர்தான் செல்வி கோமதி குப்புசாமி. பள்ளி கல்லூரிகளில் படித்துக்கொண்டிருக்கும் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு வாசிப்பாளராகத் தொடங்கிய தனது பயணத்தை அவர் சேவை என்று சொல்லி சுருக்கிக்கொள்ள விரும்பவில்லை. உண்மையில் பார்வையிழப்பு என்கிற தாங்கள் செய்யாத ஒரு பிழைக்காக அவர்கள் […]
30 ஜூன், 2020 இந்தியப் பார்வையற்றோர் முற்போக்கு சங்கத்தின் தலைவர் திரு. A.K. அருணாச்சலம் மற்றும் அவர் மனைவி கீதா இருவரும் கரோனா தொற்றுக்குப் பலியாகியிருக்கிறார்கள். அறுபதுகளில் இருக்கும் அருணாச்சலம், தன் வாழ்நாளின் இறுதிவரை பார்வையற்றோர் தொடர்பான களப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். ஊரடங்கினால் வருமானம் இழந்து தவித்த சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்த பார்வையற்ற குடும்பங்களுக்கு ஓடோடி உதவிகளை வழங்கிக்கொண்டிருந்தவர். அவருடைய களப்பணிகளில் அவருடைய மனைவியும் எப்போதும் உடன் இருப்பதையும் நம்மால் பார்க்க முடியும். அவர்களின் […]
30 ஜூன், 2020 முதலும் இடையும் சேர்ந்து கடை திறந்தன; கடை வளர வளர, முதல் பெருகப் பெருக, இடை காணாமலே போனது. தன்னார்வ, தொண்டு, நிறுவனம். *** அந்தப் பார்வையற்ற பெண்ண்உக்கு அரசு வேலை கிடைத்ததும் வரன் பார்க்கும் படலம் தொடங்கினார்கள் பெற்றோர் அவள் தங்கைக்கு. *** அரசு வேலை கிடைத்ததும் அந்தப் பார்வையற்றவன் வைத்துக்கொண்டான் சாட்டுக்கு ஸ்மார்ட் ஃபோன், பாட்டுக்கு பெரிய பெரிய ஸ்பீக்கர், நியூசுக்கு ஒரு பெரிய திரை எல்ஈடி; அவர்களும் வைத்துக்கொண்டார்கள் […]
30 ஜூன், 2020 கரோனா ஊரடங்கினால் மூடப்பட்டிருக்கின்றன மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் உண்டு உறைவிட சிறப்புப் பள்ளிகள். இனி பள்ளி எப்போது திறக்கும்? நாம் எப்போது விடுதிக்குச் செல்லப்போகிறோம் போன்ற விடை தெரியாத கேள்விகளுடன் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்கள் சொந்த ஊரில் இருக்கிறார்கள். இந்தச் சூழலில், ஆறு முதல் 12ஆம் வகுப்புப் படிக்கும் சிறப்புப் பள்ளி மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என அரசு மற்றும் அரசு உதவிபெறும் சிறப்புப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு […]
ஜூன் 30, 2020 அடையாள அட்டை வைத்திருக்கும் 13.35 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஊரடங்கு கால நிவாரணமாக ரூ. 1000 வழங்கப்படும் என தமிழக முதல்வர் அவர்களால் நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஊரடங்கு கால நிவாரணமாக ரூ. 5000 கேட்டுப் போராடியவர்களுக்கு ரூ. 1000 என்பது போதாத தொகைதான் என்றாலும், முதல்வரின் இந்த அறிவிப்பை ஒரு துவக்கமாகவும், தங்களின் தொடர் வலியுறுத்தல்களுக்குக் கிடைத்திருக்கிற சிறிய வெற்றியாகவும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்காய் போராடும் சங்கங்கள் கருதுகின்றன. முதல் மற்றும் இரண்டாம் ஊரடங்கு […]
