27 ஜூன், 2020 சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அவர்கள் சிறப்புப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “மாற்றுத்திறனாளிகளுக்கான நல ஆணையரக கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டுவரும் மாற்றுத்திறனாளிகள் நல அரசு சிறப்புப்பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் சிறப்புப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி 2020-21 ஆம் கல்வியாண்டில் சிறப்புப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தமது பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை […]
Category: Government Orders/letters/documents
ஜூன் 21, 2020 கரோனா ஊரடங்கின் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1000 வழங்கப்படும் என்கிற முதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து அதுகுறித்த அரசாணை நேற்று, 20.ஜூன்.2020 வெளியிடப்பட்டது. அந்த அரசாணையில், மொத்தம் 13 லட்சத்து 35 ஆயிரத்து 219 மாற்றுத்திறனாளிகளுக்கு, ரூ. 133 கோடியே 52 லட்சத்து 19 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நிதியை மாவட்டவாரியாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்பேற்று வழங்குவார்கள் எனவும், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாற்றுத்திறனாளிகளுக்கான […]
20 ஜூன், 2020 தமிழகத்தில் மொத்தம் 13 லட்சத்து 35 ஆயிரத்து 219 பேர் அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகள் என மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் பட்டியல் வழங்கியுள்ளார்.கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ. 1000 வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் மொத்தம் 13 லட்சத்து 35 ஆயிரத்து 219 மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வைத்திருப்பதாகவும், எனவே அவர்களுக்கு நிவாரணமாக […]
கடந்த 17.03.2020 அன்று, மீன்வளம் மற்றும் பணியாளர் சீர்திருத்தத் துறை அமைச்சரான மாண்புமிகு ஜெயக்குமார் அவர்கள் சட்டமன்றத்தில் ஓர் முக்கிய அறிவிப்பினைச் செய்தார். அதன்படி, சிறப்புத் தேவைகள் கோருகிற குழந்தைகளின் (children with special needs) பெற்றோர் அரசு ஊழியராக இருந்தால், அவர்களுக்கு அரசு ஊழியர்களின் அடிப்படை விதி 85 ன் கீழ் ஓராண்டில் வழக்கமாக வழங்கப்படும் 12 நாட்கள் தற்செயல் விடுப்போடு மேலும் ஆறு நாட்கள் சிறப்புத் தற்செயல் விடுப்பு (special casual leave) வழங்கப்படும். […]
தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கட்டுப்பாட்டில் 10 செவித்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப் பள்ளிகள் இயங்கிவருகின்றன. இந்தப் பள்ளிகளுக்கான தலைமை ஆசிரியர்கள் கடந்த ஆண்டே நியமிக்கப்படவிருந்த நிலையில், சில நிர்வாகக் காரணங்களால் அது தடைபட்டுவிட்டது.இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அவர்களால் அமைக்கப்பட்ட சிறப்புப் பள்ளி ஆசிரியர்கள் அடங்கிய குழுவின் முயற்சியால், தற்போது செவித்திறன் குறையுடையோருக்கான அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள்மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கான பணிமூப்புப் பட்டியல் வெளியாகி இருக்கிறது.வெளியிடப்பட்டுள்ள பணிமூப்புப் பட்டியலில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின், அவை […]
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இயங்கிவரும் அரசு சிறப்புப் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான கோரிக்கைகளை நிறைவேற்றும் பொருட்டு, சிறப்புப் பள்ளிகளில் பணிபுரியும் ஐந்து ஆசிரியர்களை உள்ளடக்கிய புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழு எதிர்வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 28ஆம் தேதிவரை சுமார் 20 நாட்கள் மாற்றுப்பணியில் ஆணையரகம் சென்று கோரிக்கைகள் தொடர்பான நிர்வாகப் பணிகளில் ஈடுபடுவார்கள் என மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் வெளியிட்ட ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கட்டுப்பாட்டில் 21 அரசு சிறப்புப் பள்ளிகள் […]
மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் காமராஜர் சாலை சென்னை -5. சுற்றறிக்கை ந.க.எண். 5585 /சிப /2019 நாள் 16 07–2019 பொருள் — சிறப்புப்பள்ளிகள் பிரிவு… மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் சென்னை அரசு சிறப்புப்பள்ளிகளில் 2019-2020 ஆம் கல்வி ஆண்டில் பள்ளி வேலை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்கள் பட்டியல் அனுப்பி வைக்கப்படுகிறது. பார்வை- மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரக இணை இயக்குநர் சென்னை அவர்களின் சுற்றறிக்கை கடித எண் 4853/சிப1/2017 நாள் 23-07-2018. மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தின் […]
சுருக்கம் பள்ளிக்கல்வி – ஆசிரியர் பொது மாறுதல் – ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் – அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் 2019-20 ஆம் கல்வியாண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் – ஆணை – வெளியிடப்படுகிறது. ——————————— பள்ளிக் கல்வி[ப.க.5(றுத் துறை அரசாணை (1டி) எண்.218. நாள் : 20.06.2019. திருவள்ளுவர் ஆண்டு 2050, விகாரி வருடம், ஆனி […]
அரசாணையைப் பதிவிறக்க வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்
அரசாணையைப் பதிவிறக்க வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்
