31 ஜூலை, 2020 பொதுத்தேர்வு முடிவுகளைத் தாங்கி வந்த கடந்த ஜூலை மாதமானது,, ஓவியா, காவியா என்ற இரண்டு திறமையான எதிர்கால நம்பிக்கைகளை பார்வை மாற்றுத்திறனாளி சமூகத்திற்கு அறிமுகம் செய்து சென்றிருக்கிறது. முன்னவர், பதிலி எழுத்தர் துணையின்றி மடிக்கணினியைப் பயன்படுத்தி சிபிஎஸ்ஈ பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை தானே எழுதி, 500க்கு 447 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தவர். பின்னவர் மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்று, பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் 600க்கு 571 மதிப்பெண்கள் பெற்று அசத்தியிருக்கிறார். இருவரின் பேட்டிகளையும் […]
Category: education
நிஜத்தாரகை ஓவியா
31 ஜூலை, 2020 ஓவியா பெருமிதம் என்கிற வார்த்தைக்கெல்லாம் அர்த்தம் தெரியாத அந்த வயதில், கை வலிக்க வலிக்க, பிரெயிலில் எனக்கான தேர்வினை நானே எழுதினேன். ஒருபோதும் அது எனக்கு சுமையாகவோ, வலியாகவோ, ஏன் பெருமிதமாகவும்கூட உறைத்ததே இல்லை. ஆனால், சிறப்புப் பள்ளியை விட்டு, சாதாரணப்பள்ளிக்கு இடம் பெயர்ந்து, ஒன்பதாம் வகுப்பின் முதல் இடைத்தேர்வினை நான் சொல்லச் சொல்ல ஒருவர் எழுதும் தருணம் வாய்த்தபோதே என் இழப்பை உணர்ந்தேன். அப்போதிலிருந்து நான் இறுதியாக எழுதிய முதுநிலைப் பட்டயத் […]
30 ஜூன், 2020 கரோனா ஊரடங்கினால் மூடப்பட்டிருக்கின்றன மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் உண்டு உறைவிட சிறப்புப் பள்ளிகள். இனி பள்ளி எப்போது திறக்கும்? நாம் எப்போது விடுதிக்குச் செல்லப்போகிறோம் போன்ற விடை தெரியாத கேள்விகளுடன் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்கள் சொந்த ஊரில் இருக்கிறார்கள். இந்தச் சூழலில், ஆறு முதல் 12ஆம் வகுப்புப் படிக்கும் சிறப்புப் பள்ளி மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என அரசு மற்றும் அரசு உதவிபெறும் சிறப்புப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு […]
