Categories
banking editorial

கருணை வேண்டாம், கடமை போதும்

31 ஆகஸ்ட் 2020 சவால்முரசு லோகோபார்வையற்றவர்களுக்கு ஏடிஎம் உட்பட வங்கியின் அனைத்து வசதிகளும் எந்தவித மறுப்புமின்றி வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், கடந்த 2008 ஆம் ஆண்டே, ரிசர்வ் பேங் ஆஃப் இந்தியா ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. ஆனாலும், பார்வையற்றவர்களுக்கு வங்கிகள் ஏடிஎம் தர மறுப்பதாக தினமும் புகார்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.  சுற்றறிக்கை வெளியிடப்பட்டு ஒரு தசாப்தம் கடந்த பின்னும் இந்த நிலை தொடர்வது வெட்கப்பட வேண்டிய ஒன்று. பல வங்கிகளில் வாடிக்கையாளருக்கும் […]

Categories
braille editorial education

சொல்லுங்கள்! என்ன செய்யலாம்?

31 ஜூலை, 2020 பொதுத்தேர்வு முடிவுகளைத் தாங்கி வந்த கடந்த ஜூலை மாதமானது,, ஓவியா, காவியா என்ற இரண்டு திறமையான எதிர்கால நம்பிக்கைகளை பார்வை மாற்றுத்திறனாளி சமூகத்திற்கு அறிமுகம் செய்து சென்றிருக்கிறது. முன்னவர், பதிலி எழுத்தர் துணையின்றி மடிக்கணினியைப் பயன்படுத்தி சிபிஎஸ்ஈ பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை தானே எழுதி, 500க்கு 447 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தவர். பின்னவர் மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்று, பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் 600க்கு 571 மதிப்பெண்கள் பெற்று அசத்தியிருக்கிறார். இருவரின் பேட்டிகளையும் […]

Categories
arunachalam condolence corona disabled news editorial livelihood society

களப்பணி வீரனுக்கு இதழின் அஞ்சலி

30 ஜூன், 2020 இந்தியப் பார்வையற்றோர் முற்போக்கு சங்கத்தின் தலைவர் திரு. A.K. அருணாச்சலம் மற்றும் அவர் மனைவி கீதா இருவரும் கரோனா தொற்றுக்குப் பலியாகியிருக்கிறார்கள். அறுபதுகளில் இருக்கும் அருணாச்சலம், தன் வாழ்நாளின் இறுதிவரை பார்வையற்றோர் தொடர்பான களப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். ஊரடங்கினால் வருமானம் இழந்து தவித்த சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்த பார்வையற்ற குடும்பங்களுக்கு ஓடோடி உதவிகளை வழங்கிக்கொண்டிருந்தவர். அவருடைய களப்பணிகளில் அவருடைய மனைவியும் எப்போதும் உடன் இருப்பதையும் நம்மால் பார்க்க முடியும். அவர்களின் […]