லீசம்மா போலியோவாள் பாதிக்கப்பட்டு, 55 விழுக்காடு ஊனமுற்றவர். இந்நிலையில், அவருக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டிய ஊனமுற்றோருக்கான முன்னுரிமை அடிப்படையிலான பதவி உயர்வு மறுக்கப்பட்டு, பொதுப்பிரிவினருக்கு இணையாகவே அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது.
Category: செய்தி உலா
தொடுதலையே தங்களின் இயக்கத்தில் முக்கிய ஆதாரமாகக்கொண்டிருக்கிற பார்வை மாற்றுத்திறனாளிகள் கோவிட் தொற்றுக்கு உள்ளாகக்கூடிய அதிக கெடுவாய்ப்பினை இயற்கையிலேயே பெற்றிருக்கின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு, https://ereceipt.tn.gov.in/cmprf/Interface/CMPRF/CMPRF_EntryForm https://eregister.tnega.org/#/user/pass என்ற தமிழக அரசின் இந்த இரண்டு இணையதளங்களில் Capture Code Verification என்ற முறை பார்வையற்றோர் பயன்பாட்டிற்கு உகந்ததாக இல்லை என நமது சவால்முரசு தளத்தில் தமிழக அரசின் இணைய வடிவமைப்பாளர்கள் கவனத்திற்கு என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தோம். அந்தக் கட்டுரையில், capture code பகுதியில் ஒலிவடிவிலான தெரிவை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இப்போது இந்த இரண்டு இணையதளங்களிலும் capture code பகுதியில் ஒலிவடிவிலான தெரிவும் […]
தன்னம்பிக்கையும் எதார்த்தமும் கலந்து உரையாடிக்கொண்டிருந்த ஷண்முகத்திற்கு இது மறுபிறவி. “கரோனா பெருந்தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும், அவர்களுக்கு வைப்புத்தொகை வழங்கப்படும்” என அறிவித்திருக்கிறார் தாயுள்ளம் கொண்ட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்.
புதிய ஆட்சி பொறுப்பேற்றுக் கடந்திருக்கும் இந்த 20 நாட்களில் மாற்றுத்திறனாளிகள் நலன் தொடர்பாக மேற்கண்ட நடவடிக்கைகளை நாமும் பட்டியலிடலாம்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உயர் அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்ட மறுவாழ்வு அலுவலர்களும் தங்கள் அலைபேசித் தொடர்பு எண்களை வழங்க முன்வரலாம்.
அந்த மாமனிதரின் அடிச்சுவடைப் பின்பற்றி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டதில் மாற்றுத்திறனாளிகளாகிய நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
682 பாடல்களைப் பாடி, தொடர்ந்து ஐம்பது மணிநேரம் இசைக்கச்சேரி நடத்தி, 48 மணிநேரம் தொடர்ந்து இசைக்கச்சேரி நடத்தி உலக சாதனை படைத்திருந்த ஹங்கேரி இசைக்குழுவின் சாதனையை, இவரது இசைக்குழு முறியடித்தது.
தற்போது கரோனாவின் இரண்டாம் அலை தமிழகத்தில் மிகத்தீவிரமாகத் தொடங்கியிருக்கிறது. “அவசியம் இன்றி யாரும் வெளியே வரவேண்டாம்” என முதல்வரே மக்களை அறிவுறுத்துகிறார்.
அன்பு்ள மாற்றுத்திறனாளி தோழமைகளே!
எதிர்வரும் 6 ஏப்ரல் நமது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் நாள். அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையைத் தவறாது ஆற்றிட அன்புடன் வேண்டுகிறது சவால்முரசு. அத்துடன், தங்களது வாக்கு செலுத்திய அனுபவங்களை நீங்கள் விரும்பினால் எங்களுடன் பகிரலாம். வாக்குச்சாவடியில் மாற்றுத்திறனாளிகளாகிய நமக்கு செய்யப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகள், தேர்தல் அலுவலர்களின் அணுகுமுறைகள், நீங்கள் வாக்குச் செலுத்திய அந்தப் பெருமிதத் தருணம் என ஏப்ரல் ஆறு செவ்வாய்க்கிழமை உங்கள் கள அனுபவம் எதுவாகினும் சொல்லுங்களேன்.
நீங்கள் பகிர விரும்பும் உங்கள் அனுபவத்தை, சவால்முரசு வாட்ஸ் ஆப் குழுமத்திலோ, அல்லது, 9789533964 என்ற எண்ணிலோ, குரல்ப்பதிவு அல்லது எழுத்து வடிவிலோ வழங்கலாம்.
மின்னஞ்சல் வழியாகத் தொடர்புகொள்ள விரும்புவோர், mail@savaalmurasu.com என்ற முகவரிக்கும் எழுதலாம்.
ஏப்ரல் 6 காலை 7 மணி முதல், அன்று இரவு 10 மணி வரை.
அனைவரும் அறிய, அனுபவம் பகிர்வோம்.
