CBSE சுற்றறிக்கையினைப் பின்பற்றி, பொதுத்தேர்வு எழுதவுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டுமென முதல்வருக்கு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. “தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை மற்றும் அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் அறிவித்துள்ள 10,11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை முழுமையாகவோ அல்லது மாற்றுத்திறன் குழந்தைகளுக்காவது ரத்து செய்து , அனைவரையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கக் கோரி எமது சங்கத்தின் சார்பில் ஜுன் –1 தேதியிட்டு ஏற்கனவே மனு அனுப்பப்பட்டுள்ளது. பதிலி […]
Category: செய்தி உலா
மாற்றுத்திறனாளிகளுக்கு ஊரடங்கு காலத்தில் குறைந்தபட்சம் ரூ. 5000 வழங்க வேண்டுமென வலியுறுத்தி, கோரிக்கை நிறைவேறும்வரை காலவரையற்ற போராட்டத்தை முன்னெடுக்கவிருப்பதாக மாற்றுத்திறனாளி சங்கங்களின் கூட்டு இயக்கம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. “கொரோனா பேரிடர் ஊரடங்கு 5 – வது முறையாக ஜுன் -30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்னும் எவ்வளவு காலம் நீட்டிக்கப்படும் என்பதும் தெரியவில்லை. கடந்த இரண்டரை மாதங்களாக ஏற்கனவே கிடைத்து வந்த குறைந்தபட்ச வருவாய்களைக்கூட இழந்து , மாற்றுத்திறனாளிகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர். மருந்து […]
கொரோனா பேரிடர் மற்றும் ஊரடங்கு காரணமாக வருவாய் இழந்து தவிக்கும் குடும்பங்களில் இடம்பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகளை பாதுகாக்க குறைந்தபட்சம் ரூ . 5000 வழங்க வலியுறுத்தி கருப்பு சின்னம் அணிந்து அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டங்கள் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் வியாழன் (மே 7, 2020) அன்று நடைபெற்றன. காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளின் மிரட்டல் மற்றும் அடக்குமுறைகளை மீறி மாநிலம் முழுவதும் சுமார் 400 மையங்களில் இந்தப் போராட்டங்கள் […]
கொரானா தடுப்பு நடவடிக்கை காரணமாக, கடந்த 24.03.2020 முதல் அடுத்த 21 நாட்களுக்கு நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்தகைய இக்கட்டான சூழலில், பார்வை மாற்றுத்திறனாளிகள் அதிலும் குறிப்பாக அமைப்புசாரா பார்வை மாற்றுத்திறனாளி தொழிலாளர்களான இரயில் மற்றும் நடமாடும் வியாபாரிகளின் அன்றாட வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நெருக்கடியான காலகட்டத்தில், பொதுமக்களால் கடைபிடிக்கப்படும் சமூக விலகல் காரணமாக, பார்வை மாற்றுத்திறனாளிகள் தங்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளப் பிறரின் உதவியைப்பெற இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனைக் […]
“மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016 ஐ முறையாக அமல்படுத்திட, சிறப்பு ஆணையரை நியமிக்க வேண்டும்” என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சுமார் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற கோட்டை முற்றுகைப் போராட்டம் தலைமைச்செயலரின் சுமூகமான பேச்சுவார்த்தைக்குப் பிறகு முடிவுக்கு வந்தது. கடந்த 29.ஆகஸ்ட்.2019 அன்று நடைபெற்ற போராட்டமும் அதற்குப் பிறகான கைது நடவடிக்கைகள் குறித்து பல பத்திரிக்கைகளிலும் செய்திகள் வெளிவந்துள்ளன. கோட்டையை முற்றுகையிடச் சென்ற மாற்றுத்திறனாளிகளை இடைமறித்துக் கைது செய்த காவல்த்துறையினர் அவர்களை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு […]
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்
