ஆஸ்பெட்டாஸ் போடப்பட்ட பத்துக்குப் பத்து அளவிலான ஹால், சிறிய அளவிலான திண்ணையின் வலப்பக்கத்திலேயே சமையல்கட்டு என வரிசையாகக் கட்டப்பட்டிருந்த ஐந்து வீடுகளைக்கொண்ட காம்பவுண்டுக்குள் இரண்டாவதாகவும், மூவாயிரம் அதிகம் என்று சொல்லும்படிக்கு இருந்தது ராமுவின் வாடகை வீடு.
Category: இலக்கியம்
நான் உன்மீதான யோசனைகளிலேயே வெகுநேரமாக அமர்ந்திருந்ததோடு, என்மீதான உன்னுடைய காதலுக்கான காரணத்தைக் கண்டறிய முயற்சித்துக்கொண்டிருந்தேன்.
நோதல் வேண்டாம் தோழர்களே! நோன்பு துறங்கள். பசித்திருந்தது போதும், உணவு எடுங்கள். காந்தியையே மறந்தவகளுக்கு காந்தியமொழி புரியாது; – நம்மைக் கருணைச் சரக்காய் பார்ப்பவருக்கு நம் கண்ணியம் எதுவும் தெரியாது. இன்று நம் முழக்கங்கள் நிறைக்கும் இந்த முற்றத்திற்கு நாம் முடிந்த மட்டும் எத்தனைமுறை வந்து சென்றோம், எண்ணிச் சொல்ல இயலுமா இவர்களால்? கொளுத்தும் வெயிலிலும் கொட்டும் மழையிலும் இடற்றும் பள்ளங்கள், ஏமாற்றும் மேடுகள், அரற்றும் சாலைகள் என அத்தனையும் கடந்து ஆண்டாண்டு கோரிக்கைகளோடு அலுவலகம் புகுந்தால் […]
சீரற்ற அவள் எண்ண ஓட்டங்கள் முன்னும் பின்னுமாய் அவளைப் பந்தாடுகின்றன. டீவியில் யார் யாரோ இரங்கல் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள். நடிகை ராதிகா குரல் மட்டும்தான் அவளுக்குப் பரிட்சயம். “தாங்க முடியலையே சார்” பிரமிட் நடராஜன் சொன்னபோது அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்துவிட்டது.
