31 ஆகஸ்ட், 2020 வரலட்சுமி, சுரேஷ் நாயகி வரலட்சுமி காவல்த்துறை அதிகாரியாக நடித்து இந்த மாத (ஆகஸ்ட்) தொடக்கத்தில் நெட் ஃப்லிக்ஸில் வெளியான திரைப்படம் டேனி. பள்ளியில் படிக்கும் ஒரு பார்வையற்ற குழந்தையின் இறப்பு குறித்த புலனாய்வே படத்தின் மூலக்கதை என்பதால், இந்தப் படத்தின் பல காட்சிகள் தஞ்சை பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படமாக்கப்பட்டன. படத்தில் அந்தப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் சுரேஸ்குமார் மற்றும் இரவுக்காவலர் ராஜ்குமார் ஒரு காட்சியில் தோன்றியிருக்கிறார்கள். டைட்டில் கார்டிலும் […]
Category: disabled news
31 ஜூலை, 2020 ரவிக்குமார் இப்போதுதான் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஏடிஎம் வசதி கிடைக்கவில்லை என்ற ஒரு பார்வையற்றவரின் கதறலுக்குத் தீர்வுகிடைத்திருக்கிறது. மீண்டும் இன்னொரு குரல்; இந்தமுறை இந்தியன் வங்கியின் வாடிக்கையாளரிடமிருந்து. பூவிருந்தவல்லி பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பல ஆண்டுகள் பணியாற்றி, ஓய்வுபெற்ற ஆசிரியரான திரு. ரவிக்குமார் அவர்கள், உடல் மற்றும் பார்வைக்குறைபாடு எனஇரண்டு வகையான ஊனங்களால் பாதிக்கப்பட்டவர். தான் வங்கிக்குப் பணம் எடுக்க செல்வதற்கே தனக்கு இன்னொருவரின் துணை தேவைப்படும் நிலையில், வங்கியின் […]
நிஜத்தாரகை ஓவியா
31 ஜூலை, 2020 ஓவியா பெருமிதம் என்கிற வார்த்தைக்கெல்லாம் அர்த்தம் தெரியாத அந்த வயதில், கை வலிக்க வலிக்க, பிரெயிலில் எனக்கான தேர்வினை நானே எழுதினேன். ஒருபோதும் அது எனக்கு சுமையாகவோ, வலியாகவோ, ஏன் பெருமிதமாகவும்கூட உறைத்ததே இல்லை. ஆனால், சிறப்புப் பள்ளியை விட்டு, சாதாரணப்பள்ளிக்கு இடம் பெயர்ந்து, ஒன்பதாம் வகுப்பின் முதல் இடைத்தேர்வினை நான் சொல்லச் சொல்ல ஒருவர் எழுதும் தருணம் வாய்த்தபோதே என் இழப்பை உணர்ந்தேன். அப்போதிலிருந்து நான் இறுதியாக எழுதிய முதுநிலைப் பட்டயத் […]
30 ஜூன், 2020 இந்தியப் பார்வையற்றோர் முற்போக்கு சங்கத்தின் தலைவர் திரு. A.K. அருணாச்சலம் மற்றும் அவர் மனைவி கீதா இருவரும் கரோனா தொற்றுக்குப் பலியாகியிருக்கிறார்கள். அறுபதுகளில் இருக்கும் அருணாச்சலம், தன் வாழ்நாளின் இறுதிவரை பார்வையற்றோர் தொடர்பான களப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். ஊரடங்கினால் வருமானம் இழந்து தவித்த சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்த பார்வையற்ற குடும்பங்களுக்கு ஓடோடி உதவிகளை வழங்கிக்கொண்டிருந்தவர். அவருடைய களப்பணிகளில் அவருடைய மனைவியும் எப்போதும் உடன் இருப்பதையும் நம்மால் பார்க்க முடியும். அவர்களின் […]
செய்தி உலா
30 ஜூன், 2020 ஷேகர் நாயக் இந்தியப் பார்வையற்றோர் கிரிக்கெட் அணியின் முன்னால் கேப்டன் ஷேகர் நாயக்கிற்கு இந்திய கிரிக்கெட் சங்கம் ஒரு லட்சம் ரூபாய் வழங்கி உதவ முன்வந்துள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த ஷேகர் நாயக் இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ வென்றவர். ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவர் கரோனா ஊரடங்கால் தன் வேலயை இழக்க நேர்ந்தது. இந்நிலையில், தனது மனைவியின் நகைகளை வங்கியில் ஒரு லட்சம் ரூபாய்க்கு அடமானம் வைத்த்இருக்கிறார். ஷேகர் […]
