மாற்றுத்திறனாளிகளுக்கு ஊரடங்கு காலத்தில் குறைந்தபட்சம் ரூ. 5000 வழங்க வேண்டுமென வலியுறுத்தி, கோரிக்கை நிறைவேறும்வரை காலவரையற்ற போராட்டத்தை முன்னெடுக்கவிருப்பதாக மாற்றுத்திறனாளி சங்கங்களின் கூட்டு இயக்கம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. “கொரோனா பேரிடர் ஊரடங்கு 5 – வது முறையாக ஜுன் -30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்னும் எவ்வளவு காலம் நீட்டிக்கப்படும் என்பதும் தெரியவில்லை. கடந்த இரண்டரை மாதங்களாக ஏற்கனவே கிடைத்து வந்த குறைந்தபட்ச வருவாய்களைக்கூட இழந்து , மாற்றுத்திறனாளிகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர். மருந்து […]
Category: differently abled news
மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அவர்களின் உடனடி நடவடிக்கையால், அறுபது நாட்களுக்கும் மேலாகப் பிரிந்திருந்த பார்வை மாற்றுத்திறனாளி குடும்பம் ஒன்றிணைந்தது. திருவள்ளூரைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி தம்பதிகள் மாரிமுத்து பிரியா. இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு மகன் இருக்கிறான். மாரிமுத்து இரயிலில் வணிகம் செய்து வருகிறார். இந்நிலையில், தமிழக அரசால் முதல்கட்ட ஊரடங்கு கடந்த மார்ச் 24ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. உறவினரின் குடும்ப நிகழ்வில் பங்கேற்க தனது இரண்டு வயது மகனுடன் செங்கற்பட்டு வந்த பிரியாவால் திருவள்ளூர் திரும்ப […]
படக்காப்புரிமை தி இந்து ஆங்கிலம் கடந்த 2012 ஆம் ஆண்டு, மாதம் 5000 என்ற தொகுப்பூதியத்தின் அடிப்படையில், இசை, ஓவியம் உள்ளிட்ட சிறப்பு பாடங்களுக்கான சிறப்பாசிரியர்கள் சுமார் 16549 பேர் பகுதிநேர ஆசிரியர்களாகப் பள்ளிக்கல்வித்துறையால் நியமிக்கப்பட்டனர். அவர்களுள் 200 மாற்றுத்திறனாளி பகுதிநேர ஆசிரியர்களும் அடங்குவர்.ரூ. 5000 தொகுப்பூதியம் ரூ. 7700 ஆக உயர்த்தப்பட்டபோதிலும், ஒரு வருடத்தின் 11 மாதங்கள் மட்டுமே இவ்வகைப் பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. மே மாதம் ஊதியம் எதுவும் வழங்கப்படுவதில்லை. தற்போதைய கரோனா […]
படக்காப்புரிமை டைம்ஸ்நவ் நன்றி டைம்ஸ் நவ்: சென்னை பல்லாவரத்தின் புனித செபாஸ்டின் குடியிருப்பில் வசிக்கும் பதினெட்டு பார்வையற்ற குடும்பங்கள் ஒன்றிணைந்து ஓர் இசைக்குழுவை நடத்திவருகின்றனர். தற்போதைய கரோனா ஊரடங்கு காரணமாக, சமூக, கலாச்சார மற்றும் பல்வேறு மத நிகழ்வுகளுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளதால், அனைவருமே வருமானம் ஏதுமின்றி, வீட்டின் நான்கு சுவர்களுக்குள் முடங்கியிருக்கின்றனர். குழுவில் ஒருவரான தண்டபாணி, தற்போது அமல்ப்படுத்தப்பட்டிருக்கும் “ஊரடங்கின் காரணமாக நாங்கள் வருமானம் இழந்து தவித்து வருகிறோம். சாதாரண நாட்களில் ஒரு மாதத்தில் 15 கச்சேரிகள் கிடைத்துவிடும். […]
நன்றி மின்னம்பலம்சென்னை மயிலாப்பூர் பகுதியில் மூன்று சக்கர வண்டி ஒன்றை வீடாக மாற்றி சாலையோரம் வசித்து வந்தவர்கள் தங்கப்பன் மற்றும் ஜெயா. 65 வயதாகும் ஜெயா, 70 வயது தங்கப்பனிடம் காலையில் பேசியபடியே தனது நாளை துவங்குவது வழக்கம். அதுபோல ஞாயிற்றுகிழமை அவர் பேசிக்கொண்டிருக்கையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு தங்கப்பன் ஏற்கனவே இறந்தது அவருக்கு தெரிய வந்துள்ளது.அந்த பகுதியில் வசிப்பவர்கள் அவர்களுக்கு காலை உணவு வழங்க வந்தபோது, தங்கப்பன் இறந்தது அவர்களுக்கு தெரியவர பார்வையற்ற […]
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்மு.யுவராஜ் சென்னைஆணை பெற்று 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் உதவித் தொகை கிடைக்காததால் மாற்றுத்திறனாளிகள் தவித்து வருகின்றனர்.தமிழகம் முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். 40 சதவீதம் ஊனம் அடைந்த மாற்றுத்திறனாளி களுக்கு வருவாய் துறை மூலம் மாதம்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகையைப் பெற குடும்ப அட்டை, ஆதார், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, வங்கி கணக்குப் புத்தக நகல், புகைப்படம் […]
நாகை மாவட்டம் செம்பனார்கோவில் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் மாற்றுத் திறனாளி மாணவி ஒருவர் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் ஆசிரியர் பாஸ்கர், முதல்நாள் நடத்திய பாடத்தில் இருந்து மாணவியிடம் கேள்வி கேட்டுள்ளார். இதற்கு மாணவி சரிவர பதிலளிக்காததால், ஆத்திரமடைந்த ஆசிரியர் பாஸ்கர், மாணவியின் இடது கையில் கத்தியால் குத்தினார். இதில், படுகாயமடைந்த மாணவியை மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்த புகாரின்பேரில் செம்பனார்கோவில் போலீஸார் வழக்கு பதிவு […]
குருபிரசாத்குரலற்றவர்களின் குரல்…தி.விஜய் கோவை, சாடிவயல் பகுதியில் உள்ள கோவைக் குற்றாலத்தில் (Eco Tourism) அறிவிப்பாளராகப் பணிபுரிந்துவருகிறார் அய்யாச்சாமி என்ற பழங்குடி இளைஞர். அய்யாச்சாமி “சுற்றுலாப் பயணிகளின் கனிவான கவனத்துக்கு… இடது பக்கம் யாரும் போகக்கூடாது. அது வனப்பகுதி. சோப்பு, ஷாம்பு எல்லாம் பயன்படுத்தக் கூடாது. உங்க பொருள்களை எல்லாம் பத்திரமா வெச்சுக்கோங்க” ஆர்ப்பரித்துக் கொட்டும் சிறுவாணி நீர்வீழ்ச்சிக்கு மத்தியிலும் கணீரென்று ஒலிக்கிறது அய்யாச்சாமியின் குரல். கோவை, சாடிவயல் பகுதியில் உள்ள கோவைக் குற்றாலத்தில் (Eco Tourism) அறிவிப்பாளராகப் […]
அருண் சின்னதுரைசாய் தர்மராஜ்.ச “எத்தனை முறை கீழே விழுந்தாலும் பயப்பட மாட்டார். அவரின் தன்னம்பிக்கைதான் அவரை இந்த அளவு உயர்த்தியிருக்கிறது” என்று நெகிழ்கிறார் நசிமா.ஜாகிர் உசேன் கறிக்கடையில் ஆள்காட்டி விரலின் உதவியால் எடை போட்டுக்கொண்டி ருந்தார் ஜாகிர். கையால் எண்ணிய பணத்தை, வாயில் வைத்து அடுக்கிக் கொள்கிறார். 10 ரூபாய் முதல் 2000 வரை உள்ள நோட்டுகளை மதிப்பு வாரியாகப் பிரித்துக்கொண்டார். கல்லாப் பெட்டி அடையாளத்திற்கு, தனது இடது கால் அருகே சிறிய கல் வைத்திருக்கிறார். வெட்டுக்கட்டை […]
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக அவரது பெயரை நேரடியாக குறிப்பிடாமல் நடிகர் ராகவா லாரன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.“வளர்ந்து வருகிற ஒரு அரசியல் தலைவருக்கும் அவரது தொண்டர்களுக்கும் ஒரு வேண்டுகோள் மற்றும் எச்சரிக்கை. இது யாருக்கு புரிகிறதோ இல்லையோ, குறிப்பிட்ட அந்த அரசியல் தலைவருக்கும் அவரது ஒரு சில தொண்டர்களுக்கும் புரிந்தால் போதும்.அண்ணா உங்களுக்கு நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன்! மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, […]
