AICFB Zoom Meeting பார்வையற்றவர்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளை வென்றெடுக்க முடியுமா?மறைக்கப்படும் தகவல்களை வெளிக்கொணர இயலுமா? இது போன்று தங்களுக்கு எழும் ஐயங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ள, இன்று 20.06.2020 நண்பகல் 12.00 மணி அளவில்,“தகவல் அறியும் உரிமைச் சட்டம்பயன்பாடும், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையும்” என்ற தலைப்பில்அகில இந்தியப் பார்வையற்றோர் கூட்டமைப்பினால் நடத்தப்படும் கருத்தரங்கில் இணையுங்கள். விவரம் பின்வருமாறுஅகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பு(All India Confederation of the Blind)இணைய வெளி கருத்தரங்கம்குறிப்பு : இக்கருத்தரங்கம் தமிழில் மட்டுமே நடத்தப்படும்.நாள் : […]
Category: differently abled education
18 ஜூன், 2020 நடுவண் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவு துறையால், அனைத்து மாநிலங்களுக்குமான இணையவழி கற்றல் மற்றும் கற்பித்தலுக்கான வழிகாட்டு நெறிமுறைப் புத்தகம் ப்ரக்யாதா என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. குழந்தைகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் உடல்நலம், பாதுகாப்பு போன்றவை தொடர்பான அறிவுரைகளும் அக்கறைகளும் பேசப்பட்டுள்ளன. அதேசமயம், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான இணையவழி கற்றல் கற்பித்தல் குறித்து வெறுமனே ஐந்து வரையறைகளுடன் கடந்திருப்பது, மாற்றுத்திறனாளிகளின் கல்வியில் அக்கறைகொண்டோரிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 20 பக்கங்களைக் […]
தலைவர் சித்ரா தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து சிறப்புப் பள்ளி விடுதிகளில் தங்கிப் பயின்றுவரும் 800க்கும் மேற்பட்ட மாணவர்களைப் பொதுத்தேர்வு எழுதும் பொருட்டு, அவர்கள் பயிலும் பள்ளிகளுக்கு அழைத்துச் செல்ல சிறப்பானதொரு முறையில் பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டதோடு, முதல்வரின் தேர்வு ரத்து என்கிற அறிவிப்பிற்குப்பிறகு அதே நடைமுறையைப் பின்பற்றி, சிறப்புப் பள்ளி மாணவர்களைப் பாதுகாப்பான முறையில் அவர்களின் இருப்பிடத்திற்கே கொண்டு சேர்த்திருக்கிறது தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை.எண்ணிக்கையில் மிகவும் குறைந்தவர்களே எனினும், மாற்றுத்திறனாளி மாணவர்களின் சிறப்புத் […]
CBSE சுற்றறிக்கையினைப் பின்பற்றி, பொதுத்தேர்வு எழுதவுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டுமென முதல்வருக்கு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. “தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை மற்றும் அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் அறிவித்துள்ள 10,11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை முழுமையாகவோ அல்லது மாற்றுத்திறன் குழந்தைகளுக்காவது ரத்து செய்து , அனைவரையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கக் கோரி எமது சங்கத்தின் சார்பில் ஜுன் –1 தேதியிட்டு ஏற்கனவே மனு அனுப்பப்பட்டுள்ளது. பதிலி […]
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் சிறப்புப் பள்ளிகளைப் பொருத்தவரை, தமிழக அரசின் சமச்சீர் கல்வி பாடங்கள் சிறப்புக் குழந்தைகளுக்கான பிரெயில், சைகைமொழி உள்ளிட்ட பிரத்யேக முறைகளோடு பொருத்திக் கற்பிக்கப்படுகின்றன. அதிலும் குறிப்பாக, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான இடைநிலைக்கல்வியில், வழக்கமான பாடங்களில் பெறும் முன்னேற்றம் மட்டுமின்றி, அந்தப் பிரத்யேக முறைகளில் குழந்தைகள் பெறும் அடைவுகளைச் சோதிப்பது, அவற்றை குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கற்பிப்பது போன்றவை இன்றியமையாத கற்பித்தல் செயல்பாடுகளாகும். இத்தகைய […]
வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம் சென்னை மாற்றுத்திறனாளி மாணவர்களுக் கான பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யலாமா என்பது குறித்து கருத்து தெரிவிக்க சிறப்பு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திற னாளிகள் வசித்து வருகின்றனர். இவர்களில், மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் படிப்பதற்காக 100-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு […]
