9 செப்டம்பர், 2020 தொடக்க நாள்: செப்டம்பர் 9: நேரம்: மாலை 7 மணி முதல் 8 மணி வரை. அன்பார்ந்த பார்வை மாற்றுத்திறனாளி தோழர்களே! பார்வையற்றோரின் பணிவாய்ப்பை அதிகரிக்க, அதிகமான பார்வை மாற்றுத்திறனாளிகள் போட்டித் தேர்வில் வென்றிட ஒரு சிறிய களத்தை அமைத்துச் செயலாற்ற விரும்புகிறது ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம். அதன்படி, போட்டித் தேர்வு எழுத விரும்பும் பார்வை மாற்றுத்திறனாளிகளை ஊக்குவித்து, தேர்வுகள் தொடர்பான பல பரிணாமங்களை அவர்களுக்கு அறிமுகம் செய்யும் விதமாக, இணைய வழியில் […]
Category: differently abled education
அழைப்பிதழைப் பதிவிறக்கசவால்முரசு: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்
2 [செப்டம்பர், 2020 Meeting link:https://us02web.zoom.us/j/88507507045Meeting ID: 885 0750 7045 நேரம்: மாலை 5.45 மணி. யூட்டூப் நேரலை: https://www.youtube.com/channel/UCULghK3SBGOeJJZ4VFvjJQQ/featured?view_as=public இன்று: செப்டம்பர் 2 2020புதன்கிழமை: பங்கேற்கும் பள்ளிகள்: 1. இந்தியப் பார்வையற்றோர் சங்கம் (IAB) முன்னால் மாணவர்கள் மட்டும். 2. T.E.L.C. பார்வையற்றோர் பள்ளி திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்) முன்னால் மாணவர்கள் மட்டும். 3. செயின்ட் ஜோசப் பார்வையற்றோர் பள்ளி பரவை. முன்னால் மாணவர்கள் மட்டும். 4. C.S.I. பார்வையற்றோர் பள்ளி அயர்னியபுரம் முன்னால் […]
9 ஆகஸ்ட், 2020 பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் நடத்தும்இணையவெளி கருத்தரங்கம்புதிய கல்விக் கொள்கையில் பார்வையற்றோர் எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும்நாள் : இன்று 09.08.2020.நேரம் : காலை 10. 45 மணி.இடம் : ஜூம் (Zoom) அரங்கம் / வலையொளி (youtube) நேரலை.சிறப்பு விருந்தினர்கள் :கல்வியாளர் எழுத்தாளர் ஆயிஷா இரா. நடராஜன் அவர்கள்.சமூக செயல்பாட்டாளர் ஜெகதீஸ்வரன் அவர்கள்.கருத்தாளர்கள் :Mrs. M. முத்துச்செல்வி, துணைத் தலைவர், அகில இந்திய பார்வையற்றோர்கூட்டமைப்பு (AICB). மேலாளர், இந்தியன் வங்கி.Ms. திப்தி […]
நிகழ்வு 1:தேனி மாவட்டம் போடி நாயக்கனூரில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் அவர்கள் வீட்டருகே வறுமையால் தாய், மாற்றுத்திறனாளி மகன் இருவர் தற்கொலை சம்பவம்! மாற்றுத்திறனாளிகள்உரிமைக்குரல் முகநூல் பக்கத்தில் குடும்பத்தினருடன் நேரடி விவாதம்! இன்று ஆகஸ்ட் 1, சனிக்கிழமை காலை 11 மணிக்கு. செவித்திறன் பாதித்த மாற்றுத்திறனாளிகள் காண சைகை மொழியும் உண்டு! நிகழ்வு 2:கோவை ஞானி அவர்களுக்கு பார்வையற்றோர் அமைப்புகளின் நினைவேந்தல்நாள் : 01.08.2020 சனிக் கிழமை.நேரம் : மாலை 05.45 மணி.ஜூம் அரங்கில் இணைவதற்கான தொடுப்பு […]
20 ஜூலை, 2020 நவீன்குமார் விருதுநகர் மாவட்டம் ஜோகில்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்புப் படித்த உடல்ச்சவால் மாற்றுத்திறனாளியான நவீன்குமார், அரசுப் பொதுத்தேர்வில் 600க்கு 572 மதிப்பெண்கள் பெற்று சாதனைபடைத்திருக்கிறார். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம் கல்குறிச்சிக்கு அருகில் இருக்கிறது தோணுகால் கிராமம். அந்த கிராமத்தில் வசிக்கும் சரவணபாண்டி நாகரத்தினம் தம்பதியின் மூத்தமகனான நவின்குமார், ஏழு மாதக் குழந்தையாகப் பிறந்தார். இதன் காரணமாக, வலது கால் மற்றும் வலது கை செயலிழந்ததோடு, பேச்சுத்திறனிலும் பாதிப்பு ஏற்பட்டது. தனது […]
17 ஜூலை, 2020 நம்புராஜன் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் சுமார் 2835 மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகின. இறுதித் தேர்வினை எழுதாத 34 ஆயிரம் மாணவர்களில் எத்தனை மாற்றுத்திறனாளி மாணவர்கள் இருக்கிறார்கள் எனத் தெரியவில்லை.இந்நிலையில், தேர்வு முடிவு வெளியான 520 பார்வைத்திறன் குறையுடைய மாணவர்களில் 497 பேரும், 592 செவித்திறன் குறையுடைய மாணவர்களில் 486 மாணவர்களும் வெற்றிபெற்றனர். 983 உடல்ச்சவால் மாற்றுத்திறனாளிகளில் 860 பேர் மற்றும் 740 இதர மாற்றுத்திறனாளிகளில் […]
16 ஜூலை, 2020 மாணவி காவியா தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இயங்கிவருகிறது திருச்சி பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி. இன்று வெளியான பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் அந்தப் பள்ளி நூறு விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளது. அந்தப் பள்ளியில் தங்கிப்பன்னிரண்டாம் வகுப்பு படித்த நாமக்கல் மாவட்டம் குமாரபாளயத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணனின் மகள் காவியா 600 மதிப்பெண்களுக்கு 571 மதிப்பெண்கள் எடுத்து சாதனைபடைத்துள்ளார். ஆறு பாடங்களிலுமே தொன்னூறுக்கு மேல் பெற்றுள்ள காவியா, தமிழில் 98, வரலாறு […]
4 ஜூலை, 2020 மாற்றுத்திறனாளியைத் தாக்கிய காவலர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிசம்பர் 3 இயக்கத்தின் வலியுறுத்தலைத் தொடர்ந்து, உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அவர்கள் காவல்த்துறை கண்காணிப்பாளருக்குக் கடிதம் எழுதியுள்ளார். தந்தை மகன் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சாத்தான்குளம் காவல்த்துறையின் அத்துமீறலை உலகமே கண்டித்து வருகிறது. இந்நிலையில், வழக்கில் சிக்கியுள்ள அதே காவலர்கள் சில மாதங்களுக்கு முன்பு, மாற்றுத்திறனாளி ஒருவரையும் கடுமையாகத் தாக்கியதாகக் குற்றச்சாட்டு […]
27 ஜூன், 2020 சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அவர்கள் சிறப்புப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “மாற்றுத்திறனாளிகளுக்கான நல ஆணையரக கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டுவரும் மாற்றுத்திறனாளிகள் நல அரசு சிறப்புப்பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் சிறப்புப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி 2020-21 ஆம் கல்வியாண்டில் சிறப்புப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தமது பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை […]
