8 செப்டம்பர், 2020 திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் வட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் உள்ள வேடந்தவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் முனைவர் ம. சிவக்குமார் (38).(அலைபேசி :8220745473) இவர் PhD முனைவர் பட்டம் பெற்று தற்போது கரூர் அரசுக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளராக தற்காலிகப் பணியில் உள்ளார். இவருக்கு ஒரு அண்ணனும் ஒரு திருமணமான தங்கையும் உள்ளனர். முனைவர் சிவக்குமார், இவரது அண்ணன், தங்கை என இவரது குடும்பத்தில் மொத்தம் உள்ள மூன்று பேருமே பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள். இவர்கள் மூவருமே […]
Category: differently abled commissioner
27 ஜூலை, 2020 P.K. பின்ச்சா P.K. பின்ச்சா (Pincha) என்றழைக்கப்படும் பிரசன்னக்குமார் பின்ச்சா ஒரு பார்வையற்றவராக இருந்தபோதிலும், பல்வேறு நடைமுறை மற்றும் மனவியல் சிக்கல்களையும் கடந்து, தனது கல்வியாலும், திட மனப்பான்மையாலும் அதிகார உச்ச பீடத்தை எட்டிப்பிடித்தவர். அத்தோடு தனது செயல்பாடுகளை அவர் நிறுத்திக்கொண்டவராக இருந்திருந்தால், இன்று அவருக்காக இந்திய பார்வையற்றோர் மற்றும் ஒட்டுமொத்த மாற்றுத்திறனாளிகள் சமூகம் கண்ணீர் வடித்துக்கொண்டிருக்க அவசியமில்லை. அஸ்ஸாம் மாநிலத்தில் பார்வையற்றோருக்காக ஒரு நிறுவனத்தைத் தொடங்கி, அதனை அரசுக்கு ஒப்படைக்கும்வரை அதன் […]
4 ஜூலை, 2020 மாற்றுத்திறனாளியைத் தாக்கிய காவலர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிசம்பர் 3 இயக்கத்தின் வலியுறுத்தலைத் தொடர்ந்து, உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அவர்கள் காவல்த்துறை கண்காணிப்பாளருக்குக் கடிதம் எழுதியுள்ளார். தந்தை மகன் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சாத்தான்குளம் காவல்த்துறையின் அத்துமீறலை உலகமே கண்டித்து வருகிறது. இந்நிலையில், வழக்கில் சிக்கியுள்ள அதே காவலர்கள் சில மாதங்களுக்கு முன்பு, மாற்றுத்திறனாளி ஒருவரையும் கடுமையாகத் தாக்கியதாகக் குற்றச்சாட்டு […]
27 ஜூன், 2020 சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அவர்கள் சிறப்புப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “மாற்றுத்திறனாளிகளுக்கான நல ஆணையரக கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டுவரும் மாற்றுத்திறனாளிகள் நல அரசு சிறப்புப்பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் சிறப்புப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி 2020-21 ஆம் கல்வியாண்டில் சிறப்புப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தமது பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை […]
ஜூன் 22, 2020 கரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அடையாள அட்டை வைத்திருக்கும் சுமார் 13 லட்சத்து 35 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1000 நிவாரணமாக வழங்கப்படும் என்கிற முதல்வரின் அறிவிப்பினைத் தொடர்ந்து அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்த நிவாரணத்தை மாவட்ட வாரியாகப் பகுத்து வழங்கிட, அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று, இரண்டு 500 ரூபாய் நோட்டுகளாக இந்த நிதி வழங்கப்பட வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் […]
ஜூன் 21, 2020 கரோனா ஊரடங்கின் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1000 வழங்கப்படும் என்கிற முதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து அதுகுறித்த அரசாணை நேற்று, 20.ஜூன்.2020 வெளியிடப்பட்டது. அந்த அரசாணையில், மொத்தம் 13 லட்சத்து 35 ஆயிரத்து 219 மாற்றுத்திறனாளிகளுக்கு, ரூ. 133 கோடியே 52 லட்சத்து 19 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நிதியை மாவட்டவாரியாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்பேற்று வழங்குவார்கள் எனவும், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாற்றுத்திறனாளிகளுக்கான […]
20 ஜூன், 2020 தமிழகத்தில் மொத்தம் 13 லட்சத்து 35 ஆயிரத்து 219 பேர் அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகள் என மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் பட்டியல் வழங்கியுள்ளார்.கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ. 1000 வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் மொத்தம் 13 லட்சத்து 35 ஆயிரத்து 219 மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வைத்திருப்பதாகவும், எனவே அவர்களுக்கு நிவாரணமாக […]
ஜூன் 18, 2020 நன்றி தி இந்து ஆங்கிலம்: குழந்தைகளுக்கு ஏற்படும் திடீர் வலிப்பு மற்றும் கால்கை வலிப்பு நோய்களைக் கட்டுப்படுத்தும் விகாபத்ரின் மாத்திரைகளுக்குத் தற்போதைய ஊரடங்கு காரணமாக, தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனைப் பத்திரிக்கை செய்திகளும் பல மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோரும் உறுதிசெய்தனர். இதையடுத்து, தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை முயற்சியால், பல்துறை ஒத்துழைப்போடு, சுமார் எட்டு லட்சம் செலவில் 3400 விகாபத்ரின் மாத்திரைகள் தருவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தமிழக அரசின் சார்பில் மத்திய அரசு மற்றும் […]
கரோனா பேரிடர் காலத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயல்படாமல் முடங்கிக் கிடப்பதாகவும், துறையின் இந்தப் போக்கினை வன்மையாகக் கண்டிப்பதாகவும், பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் பொதுச்செயலர் திரு. அ. மணிக்கண்ணன் அவர்கள் நீண்ட அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், இந்தத் துறையில் இருக்கக்கூடிய சாபக்கேடான சிக்கல் மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டங்கள் குறித்து எவ்வித புரிதலும் அற்ற, அல்லது அவர்கள் சார்ந்து இயங்குவதற்கான பயிற்சி ஏதும் பெறாத அதிகாரிகளை தொடர்ச்சியாக பணி அமர்த்துவதில் இருந்து தொடங்குகிறது எனவும், […]
தலைவர் சித்ரா தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து சிறப்புப் பள்ளி விடுதிகளில் தங்கிப் பயின்றுவரும் 800க்கும் மேற்பட்ட மாணவர்களைப் பொதுத்தேர்வு எழுதும் பொருட்டு, அவர்கள் பயிலும் பள்ளிகளுக்கு அழைத்துச் செல்ல சிறப்பானதொரு முறையில் பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டதோடு, முதல்வரின் தேர்வு ரத்து என்கிற அறிவிப்பிற்குப்பிறகு அதே நடைமுறையைப் பின்பற்றி, சிறப்புப் பள்ளி மாணவர்களைப் பாதுகாப்பான முறையில் அவர்களின் இருப்பிடத்திற்கே கொண்டு சேர்த்திருக்கிறது தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை.எண்ணிக்கையில் மிகவும் குறைந்தவர்களே எனினும், மாற்றுத்திறனாளி மாணவர்களின் சிறப்புத் […]
