29 செப்டம்பர், 2020 முத்துசாமி பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் திரு. முத்துசாமி அவர்களின் உடல்நிலையில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இன்று அதிகாலை சரியாக ஒரு மணியளவில் அன்னார் இயற்கை எய்தியதாக வந்த தகவலை அடுத்து, பார்வையற்றோர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், தற்போது அவருக்கு இதயத் துடிப்பு இருப்பதாகவும், ட்ரிப்ஸ் ஏற்றும் அளவிற்கு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் நேர்மறையான தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.
Category: csgab
9 ஆகஸ்ட், 2020 பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் நடத்தும்இணையவெளி கருத்தரங்கம்புதிய கல்விக் கொள்கையில் பார்வையற்றோர் எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும்நாள் : இன்று 09.08.2020.நேரம் : காலை 10. 45 மணி.இடம் : ஜூம் (Zoom) அரங்கம் / வலையொளி (youtube) நேரலை.சிறப்பு விருந்தினர்கள் :கல்வியாளர் எழுத்தாளர் ஆயிஷா இரா. நடராஜன் அவர்கள்.சமூக செயல்பாட்டாளர் ஜெகதீஸ்வரன் அவர்கள்.கருத்தாளர்கள் :Mrs. M. முத்துச்செல்வி, துணைத் தலைவர், அகில இந்திய பார்வையற்றோர்கூட்டமைப்பு (AICB). மேலாளர், இந்தியன் வங்கி.Ms. திப்தி […]
9 ஜூலை, 2020 ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் 2016 அத்தியாயம் 16ல் பிரிவு 89, 92, 93 ஆகிய பிரிவுகளின்கீழ் மேற்கொள்ளவிருந்த சட்ட திருத்த நடவடிக்கையினைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது நடுவண் அரசு. கரோனாவுக்குப் பின்னான காலகட்டத்தில், நாட்டின் தொழில்வளர்ச்சியை ஊக்குவிக்கும்பொருட்டு, நடுவண் அரசால் இயற்றப்பட்ட 19 சட்டங்களில் பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ள முடிவு செய்தது நடுவண் அரசு. அதன்படி, ஊனமுற்றோர் உரிமைகள் சட்டத்தின் உயிர்ப்பாகமான ‘குற்றமும் தண்டனைகளும்’ என்கிற 16ஆம் அத்தியாயத்தின் பிரிவுகளான 89, 92, […]
7 ஜூலை, 2020 மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016 அத்தியாயம் 16ல் பிரிவு 89, 92 மற்றும் 93 ஆகியவற்றில் நடுவண் அரசு சில திருத்தங்களைச் செய்ய முடிவெடுத்துள்ளது. அந்த திருத்தங்கள் எவை, அரசின் முடிவை மாற்றுத்திறனாளிகள் எவ்வாறு எதிர்கொள்வது போன்ற விவாதங்களை முன்னெடுக்கிற முதல் களமாய் அமைந்தது பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர்ப் பேரவையின் ஜூம் வழிக் கருத்தரங்கு. அந்த நிகழ்வின் சில துளிகள் இங்கே. “எல்லாச் சட்டங்களும், அவற்றை மேம்படுத்தும் பொருட்டு திருத்தப்படும். நமது ஊனமுற்றோருக்கான […]
கரோனா பேரிடர் காலத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயல்படாமல் முடங்கிக் கிடப்பதாகவும், துறையின் இந்தப் போக்கினை வன்மையாகக் கண்டிப்பதாகவும், பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் பொதுச்செயலர் திரு. அ. மணிக்கண்ணன் அவர்கள் நீண்ட அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், இந்தத் துறையில் இருக்கக்கூடிய சாபக்கேடான சிக்கல் மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டங்கள் குறித்து எவ்வித புரிதலும் அற்ற, அல்லது அவர்கள் சார்ந்து இயங்குவதற்கான பயிற்சி ஏதும் பெறாத அதிகாரிகளை தொடர்ச்சியாக பணி அமர்த்துவதில் இருந்து தொடங்குகிறது எனவும், […]
தலைவர் சித்ரா தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து சிறப்புப் பள்ளி விடுதிகளில் தங்கிப் பயின்றுவரும் 800க்கும் மேற்பட்ட மாணவர்களைப் பொதுத்தேர்வு எழுதும் பொருட்டு, அவர்கள் பயிலும் பள்ளிகளுக்கு அழைத்துச் செல்ல சிறப்பானதொரு முறையில் பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டதோடு, முதல்வரின் தேர்வு ரத்து என்கிற அறிவிப்பிற்குப்பிறகு அதே நடைமுறையைப் பின்பற்றி, சிறப்புப் பள்ளி மாணவர்களைப் பாதுகாப்பான முறையில் அவர்களின் இருப்பிடத்திற்கே கொண்டு சேர்த்திருக்கிறது தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை.எண்ணிக்கையில் மிகவும் குறைந்தவர்களே எனினும், மாற்றுத்திறனாளி மாணவர்களின் சிறப்புத் […]
பணிவாய்ப்புஉள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செப்டம்பர் மாதம் தங்கள் போராட்டத்தைத் தொடங்கவிருப்பதாக கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரி சங்கத்தின் பொதுச்செயலாளர் மணிக்கண்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அடிப்படை கோரிக்கைகளை அரசிடம் இருந்து வென்றெடுப்பதற்காக நம் சங்கம் வருகின்ற செப்டம்பர் மாதம் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது. அந்த போராட்டம் வழக்கம்போல் உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்ட வடிவத்தை கொண்டிருக்கும். மேலே சொல்லப்பட்டுள்ள போராட்டத்தில் உண்ணாவிரத தியாகிகளாக பங்கேற்க விருப்பம் இருப்பவர்கள் நம் […]
