31 ஜூலை, 2020 P.K. பின்ச்சா ஜூலை 26 ஞாயிற்றுக்கிழமை காலை, டில்லியில் ஒரு தனியார் மருத்துவமனையில் தனது இறுதி மூச்சை சுவாசித்தார் ஊனமுற்றோருக்கான நடுவண் மேனாள் தலைமை ஆணையர் (Chief Commissioner for Persons with Disabled) திரு. பிரசன்னக்குமார் பின்ச்சா அவர்கள். இந்தச் செய்தியைக் கேட்ட ஒட்டுமொத்த இந்திய ஊனமுற்றோர் சமூகமும் துடித்துப்போனது. சமூகவலைதளங்களில் அவருக்கு இரங்கல் செய்திகள் பகிரப்பட்டதோடு, ஊனமுற்றோருக்கான நடுவண் ஆணையராக அவர் மேற்கொண்ட பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் நினைவுகூரப்பட்டன. முருகானந்தம் […]
Category: condolence
30 ஜூன், 2020 இந்தியப் பார்வையற்றோர் முற்போக்கு சங்கத்தின் தலைவர் திரு. A.K. அருணாச்சலம் மற்றும் அவர் மனைவி கீதா இருவரும் கரோனா தொற்றுக்குப் பலியாகியிருக்கிறார்கள். அறுபதுகளில் இருக்கும் அருணாச்சலம், தன் வாழ்நாளின் இறுதிவரை பார்வையற்றோர் தொடர்பான களப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். ஊரடங்கினால் வருமானம் இழந்து தவித்த சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்த பார்வையற்ற குடும்பங்களுக்கு ஓடோடி உதவிகளை வழங்கிக்கொண்டிருந்தவர். அவருடைய களப்பணிகளில் அவருடைய மனைவியும் எப்போதும் உடன் இருப்பதையும் நம்மால் பார்க்க முடியும். அவர்களின் […]
