மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்ட விதிகளுக்கு மாறாக பல்வேறு வகைகளில் வினையாற்றும் தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எமது கூட்டியக்கம் கடந்த ஜூலை-10 முதல் சென்னை கோட்டை தொடர் முற்றுகை போராட்டத்தை அறிவித்திருந்தது. அந்நிலையில், ஜூலை-4 ஆம் தேதி தலைமை செயலகத்தில் எமது கூட்டியக்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய மாநில சமூகநலத்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அமைச்சர் இக்கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதே வேளையில் சிறிது கால அவகாசம் […]
Category: association statements
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல மாநில ஆணையர் இருவரும் ஒட்டுமொத்த மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கு எதிராக செயல்படுவதாகவும், இவர்களை உடனடியாக மாற்ற வேண்டும் எனவும் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் நலன் மற்றும் உரிமைகள் பாதுகாப்போர் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து டாராட்டாக் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, “தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி சி.விஜயராஜ் குமார் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல மாநில ஆணையராக மற்றொரு ஐஏஎஸ் அதிகாரி பி. மகேஷ்வரி ஆகியோர் […]
நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு மதச்சார்பு, வெறுப்பு அரசியலுக்கு எதிரான மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்புக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைப்புக்குழுவில் மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்காக செயல்பட்டுவரும் அமைப்புகளின் தலைவர்களான எஸ். நம்புராஜன், பி.எஸ். பாரதி அண்ணா, பேரா.தீபக், பி.மனோகரன், இ.கே. ஜமால் அலி உள்ளிட்ட தலைவர்களும், மருத்துவம், பொறியியல், ஊடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முத்திரை பதித்து செயல்பட்டு வரக்கூடிய பின்கண்ட மாற்றுத்திறனாளி பிரபலங்களும் இணைந்துள்ளனர். இந்த ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நேற்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது. […]
மக்களவைத் தேர்தல் பரபரப்பு தொடங்கிவிட்டது. பொது மக்களை எப்படிக் கவர்வது, எந்த அறிவிப்பு பெருவாரியான மக்களின் வாக்குகளைத் தங்கள் பக்கம் கொண்டுவரும் என அனைத்து தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் சிந்தித்துக்கொண்டிருக்க, அனைத்துக் கட்சிகளுக்கும் முன்மாதிரியாய், சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களையும் ஒருங்கிணைக்கும் நோக்கோடு, மாக்சிஸ்ட் கம்நியூஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளிவந்திருக்கிறது. தேர்தல் அறிக்கையைப் பார்வை மாற்றுத்திறனாளிகளும் படித்து அறிந்துகொள்ளும் வகையில், அதனை ஒலிவடிவில் வெளியிட்டிருக்கிறது சிபிஎம். பொதுவுடைமைக் கட்சியின் இந்த முன்னெடுப்பை மனதாரப் பாராட்டி […]
