Categories
association letters association statements corona differently abled commissioner differently abled department differently abled news national ID card news about association relief pension

“கரோனா நிவாரண நிதி வழங்குவதில் உள்ளாட்சி ஊழியர்களை பயன்படுத்த வேண்டும்” முதல்வருக்கு டாராடாக் கடிதம்

ஜூன் 22, 2020  கரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அடையாள அட்டை வைத்திருக்கும் சுமார் 13 லட்சத்து 35 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1000 நிவாரணமாக வழங்கப்படும் என்கிற முதல்வரின் அறிவிப்பினைத் தொடர்ந்து அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்த நிவாரணத்தை மாவட்ட வாரியாகப் பகுத்து வழங்கிட, அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று, இரண்டு 500 ரூபாய் நோட்டுகளாக இந்த நிதி வழங்கப்பட வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் […]

Categories
association statements court differently abled education differently abled news news about association seminar

தகவல் அறியும் உரிமைச் சட்டம் பயன்படுத்துவது எப்படி என்ற தகவல் அறிய வேண்டுமா? வாருங்கள் கூடுகைக்கு

AICFB Zoom Meeting பார்வையற்றவர்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளை வென்றெடுக்க முடியுமா?மறைக்கப்படும் தகவல்களை வெளிக்கொணர இயலுமா? இது போன்று தங்களுக்கு எழும் ஐயங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ள, இன்று 20.06.2020 நண்பகல் 12.00 மணி அளவில்,“தகவல் அறியும் உரிமைச் சட்டம்பயன்பாடும், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையும்” என்ற தலைப்பில்அகில இந்தியப் பார்வையற்றோர் கூட்டமைப்பினால் நடத்தப்படும் கருத்தரங்கில் இணையுங்கள். விவரம் பின்வருமாறுஅகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பு(All India Confederation of the Blind)இணைய வெளி கருத்தரங்கம்குறிப்பு : இக்கருத்தரங்கம் தமிழில் மட்டுமே நடத்தப்படும்.நாள் : […]

Categories
association letters association statements corona differently abled news important programs seminar

பார்வையற்றோருக்கான வங்கி சேவை, தெளிவும் தீர்வும் பெற ஓர் இணைய வழி உரையாடல்

பார்வையற்றோர் ATM, Net Banking, cheque book, Loan  வசதிகளைப் பெற இயலுமா?  வங்கி கடன்களில் பார்வையற்றோருக்கு ஏதேனும் சலுகைகள் உள்ளதா?இது போன்று தங்களுக்கு எழும் ஐயங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ள ,19.06.2020 இன்று நண்பகல் 12.15 மணி அளவில், அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பால்,  பார்வையற்றோருக்கான வங்கி சேவைகள் என்ற தலைப்பில்நடத்தப்படும் கருத்தரங்கில் இணையுங்கள். விவரம் பின்வருமாறு ஏஐசிஎஃப் பியின் அலுவலகம்  அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பு(All India Confederation of the Blind)இணைய வெளி கருத்தரங்கம்குறிப்பு : […]

Categories
association letters association statements corona csgab differently abled commissioner differently abled department Govt. policies affected differently abled

“அலட்சியத்தை பெரும் லட்சியமாய் கொண்டு இயங்கும் ஆணையரில்லா மாற்றுத்திறனாளிகள் ஆணயரகத்தை வன்மையாக கண்டிக்கிறோம்!” பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் கடுமையான அறிக்கை

கரோனா பேரிடர் காலத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயல்படாமல் முடங்கிக் கிடப்பதாகவும், துறையின் இந்தப் போக்கினை வன்மையாகக் கண்டிப்பதாகவும், பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் பொதுச்செயலர் திரு. அ. மணிக்கண்ணன் அவர்கள் நீண்ட அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், இந்தத் துறையில் இருக்கக்கூடிய சாபக்கேடான சிக்கல் மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டங்கள் குறித்து எவ்வித புரிதலும் அற்ற, அல்லது அவர்கள் சார்ந்து இயங்குவதற்கான பயிற்சி ஏதும் பெறாத அதிகாரிகளை தொடர்ச்சியாக  பணி அமர்த்துவதில் இருந்து தொடங்குகிறது எனவும், […]

Categories
agitation association letters association statements corona differently abled rally

பன்மடங்கு அதிகரித்து வரும் கொரோனா பேரபாயம் காரணமாக ஜுன் -10 காலவரையற்ற போராட்டம் ஒத்திவைப்பு

கரோனா பேரிடர் கால ஊரடங்கின்போது பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு ரூ. 5000 நிவாரணமாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, இன்று ஜூன் 10 முதல் மாற்றுத்திறனாளி உரிமைகள் கூட்டு இயக்கத்தால் அறிவிக்கப்பட்ட காலவரையற்ற போராட்டம், பன்மடங்காகப் பெருகிவரும் கரோனா தொற்று காரணமாகக் கைவிடப்படுவதாக கூட்டு இயக்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ” கொரோனா பேரிடர் ஊரடங்கு நிவாரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு மாதம் . ரூ .5000 / – வழங்க வேண்டுமென்ற நியாயமான கோரிக்கையை […]

Categories
association letters association statements corona differently abled education examinations guidelines for scribe system scribe special schools

“பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்விலிருந்து மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விலக்கு வழங்குக” முதல்வருக்கு டாராடாக் கடிதம்

     CBSE சுற்றறிக்கையினைப் பின்பற்றி, பொதுத்தேர்வு எழுதவுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டுமென முதல்வருக்கு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. “தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை மற்றும் அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் அறிவித்துள்ள 10,11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை முழுமையாகவோ அல்லது மாற்றுத்திறன் குழந்தைகளுக்காவது ரத்து செய்து , அனைவரையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கக் கோரி எமது சங்கத்தின் சார்பில் ஜுன் –1 தேதியிட்டு ஏற்கனவே மனு அனுப்பப்பட்டுள்ளது.  பதிலி […]

Categories
agitation association letters association statements corona differently abled news Govt. policies affected differently abled

மாற்றுத்திறனாளிகளுக்கு ஊரடங்கு கால நிவாரணம் மாதம் ரூ.5000/- ஜுன்-10 முதல் கோரிக்கை நிறைவேறும் வரை மாநிலம் முழுவதும் போராட்டம்! மாற்றுத்திறனாளிகள் கூட்டு இயக்கம் அறிக்கை

 மாற்றுத்திறனாளிகளுக்கு ஊரடங்கு காலத்தில் குறைந்தபட்சம் ரூ. 5000 வழங்க வேண்டுமென வலியுறுத்தி, கோரிக்கை நிறைவேறும்வரை காலவரையற்ற போராட்டத்தை முன்னெடுக்கவிருப்பதாக மாற்றுத்திறனாளி சங்கங்களின் கூட்டு இயக்கம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  “கொரோனா பேரிடர் ஊரடங்கு 5 – வது முறையாக ஜுன் -30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்னும் எவ்வளவு காலம் நீட்டிக்கப்படும் என்பதும் தெரியவில்லை. கடந்த இரண்டரை மாதங்களாக ஏற்கனவே கிடைத்து வந்த குறைந்தபட்ச வருவாய்களைக்கூட இழந்து , மாற்றுத்திறனாளிகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர். மருந்து […]

Categories
agitation association statements news about association

“கொரோனா பேரிடர் நிவாரண நிதி குறைந்தபட்சம் ரூ . 5000 வழங்காவிட்டால்… மாற்றுத்திறனாளிகள் போராட்டம் தீவிரமடையும்” தலைவர்கள் எச்சரிக்கை

 கொரோனா பேரிடர் மற்றும் ஊரடங்கு காரணமாக வருவாய் இழந்து தவிக்கும் குடும்பங்களில் இடம்பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகளை பாதுகாக்க குறைந்தபட்சம் ரூ . 5000 வழங்க வலியுறுத்தி கருப்பு சின்னம் அணிந்து அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டங்கள் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் வியாழன் (மே 7, 2020) அன்று நடைபெற்றன. காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளின் மிரட்டல் மற்றும் அடக்குமுறைகளை மீறி மாநிலம் முழுவதும் சுமார் 400 மையங்களில் இந்தப் போராட்டங்கள் […]

Categories
association statements

மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமான பயணம்

 கல்லுப்பட்டி முதல் கலிஃபோர்னியா வரை, “அன்புத் தோழமைகளே!” என்கிற எங்களின் ஒற்றை மன்றாட்டிற்குச் செவிசாய்த்து, பார்வையற்றோர் சமூகத்தின் துயர்துடைக்க நீண்டுகொண்டிருக்கிற நூற்றுக்கணக்கான கரங்களை மானசீகமாய்ப் பற்றிக்கொள்கிறோம். உறுதிச் சான்று கேட்பதில்லை, உளச்சான்றே சாட்சி, எவ்விதப் புகைப்படமும் இல்லை, அன்பின் மன வரைபடம் கொண்டு தேடித் தெரிவு செய்த 300க்கும் மேற்பட்ட பார்வையற்றோர் குடும்பங்களுக்கு தலா ஆயிரம் ரூபாயை களப்பணி ஏதுமின்றி  தொழில்நுட்ப உதவியுடன் அவர்களின் வங்கிக் கணக்கில் சேர்த்து வருகிறோம். கனத்த மனதைத் தந்துவிட்டுப் போகிற சில […]

Categories
association statements

மத்திய நிதி அமைச்சரின் அறிவிப்பு! பெரும் ஏமாற்றம்!!  மாற்றுத்திறனாளிகளுக்கு எவ்விதத்திலும் போதாது! மாதம் ரூ.5000 ஆக உயர்த்தித்தர கோரிக்கை

படக்காப்புரிமை minnambalam.com கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்கள் இன்று அறிவித்த மத்திய அரசின் சிறப்பு நிவாரண தொகுப்பு.. மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை பெருத்த ஏமாற்றம்!  ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை(NPRD) அறிக்கை!மத்திய நிதியமைச்சர் மூன்று மாதங்களுக்கு சேர்த்து மாற்றுத்திறனாளிகளுக்கு வெறும் ரூ.1000 மட்டுமே சிறப்பு உதவி நிதி, அதுவும் 2 தவணைகளாக வங்கிகளில் நேரடியாக செலுத்தும் முறையில் தருவதாக அறிவித்துள்ளார். இது மாதம் ஒன்றுக்கு சராசரியாக மாதம் ரூ.333.33 மட்டுமே […]