30 ஜூன், 2020 எந்த ஒரு மூவும் செய்யாதபடிக்கு, ஒட்டுமொத்த மாநிலத்திற்கும் கரோனா செக் வைத்துவிட்டது. பார்வையற்றோருக்கு சோசியல் டிஸ்டன்ஸ் என்கிற டபுல் செக் வேறு. நம் ஆட்கள்தான் சவாலை திவாலாக்கப் பிறவியெடுத்தவர்களாயிற்றே. விடுவார்களா? ஒருகை பார்ப்போம் என்று எல்லாக் களத்திலும் புகுந்து அடித்தார்கள். வங்கிக்களம் நுழைந்து, வறுமையில் வாடிய தன் சமூகத்தின் துயர் துடைத்தார்கள். அகில உலகிற்கே ஜூம் பயன்பாட்டைப் பரவலாக்கி, அறிவுக்களத்தில் சட்டம், சமூகம், இலக்கியம், இசை என இன்றுவரை விவாதித்து விழிப்புணர்வு பரப்பிக்கொண்டிருப்பவர்கள் […]
