Categories
announcements of district collectors corona differently abled news jeyabalan national ID card relief pension

உட்கார்ந்த இடத்திலேயே சமூகப்பணி, உதவிக்கு விரைந்துவந்த மாவட்ட ஆட்சியர்; கரூரில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்

10 ஜூலை, 2020 கரூர் காவல்த்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வருபவர் ஜெயபாலன். பார்வை மாற்றுத்திறனாளியான இவரின் நொடிநேர சமூகப்பணி அனைவரின் பாராட்டையும் பெற்றிருக்கிறது. கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்கிற 70 வயது மாற்றுத்திறனாளி தனது அடையாள அட்டை தொலைந்துவிட்டதால், அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு அறிவித்துள்ள ரூ. 1000 நிவாரணத்தைப் பெறமுடியாமல் தவித்து வந்திருக்கிறார். தனக்குப் புதிய அடையாள அட்டை வழங்கும்படி வட்டாட்சியரிடமும் மனு கொடுத்துள்ளார். இதற்கிடையே, மாரியப்பனுக்கு நிவாரணம் வழங்க மறுத்த கிராம நிர்வாக […]

Categories
announcements of district collectors

நன்றி இந்து தமிழ்த்திசை: – புதுக்கோட்டையில் இன்று மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்

புதுக்கோட்டை புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தலைமையில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் இன்று (செப்.4) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியர் டி.ஜி.வினய் தலைமை வகித்தார். இதில், 74 கோரிக்கை மனுக்கள் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெறப்பட்டன. மாற்றுத்திறனாளிகள் எளிதாக அறிந்துகொள்ளும் வகையில் […]

Categories
announcements of district collectors

பள்ளி செல்லாத, மாற்றுத்திறன் குழந்தைகள் கணக்கெடுப்பு

நன்றி இந்து தமிழ்த்திசைதிருச்சி திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் 2019-20-ம் ஆண்டுக்கான பள்ளி செல்லாத மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் குறித்து கிராமம் வாரியாக மே 15-ம் தேதி வரை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. கணக்கெடுப்பில் ஈடுபடுபவர்களிடம் தங்கள் கிராமத்தில் உள்ள பள்ளி செல்லாத மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் குறித்த முழு விவரங்களையும் தெரிவித்து, அரசின் நலத் திட்டங்கள் அவர்களை முழுமையாகச் சென்றடைய உதவ […]