இது ஒன்றும் பிஸ்கட் சமாச்சாரம் இல்லை, இது மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்வாதாரப் பிரச்சனை. அவர்களின் நடத்தல், படித்தல் போன்ற இயல்பான அடிப்படைச் செயல்பாடுகளையே இந்த வரி விதிப்பு முடக்கிப்போடுகிறது
இது ஒன்றும் பிஸ்கட் சமாச்சாரம் இல்லை, இது மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்வாதாரப் பிரச்சனை. அவர்களின் நடத்தல், படித்தல் போன்ற இயல்பான அடிப்படைச் செயல்பாடுகளையே இந்த வரி விதிப்பு முடக்கிப்போடுகிறது
ஒரு உடல் ஊனமுற்றவர் அந்த அலுவலகத்தில் பணிக்குச் சேர்கிறார் என்றால், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் குறித்து மனிதநேய அடிப்படையிலேனும் ஒரு நிர்வாகம் சிந்தித்திருக்க வேண்டாமா?
இரண்டாண்டுகளாக தனது இயற்கை உபாதைகளுக்கு ஒரு ஊனமுற்ற பெண் அருகே இருந்த யாரோ ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருக்கிறார் என்ற செய்தி மனதை அறிக்கிறது. இதுவே இறுதி நிகழ்வாக இருக்க வேண்டும்.
பார்வை மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று உங்கள் மேலான ஆலோசனைகளை வழங்கலாம். உங்கள் நண்பர்களுக்கும் இதனை வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பகிருங்கள்.
31 ஜூலை, 2020 ரவிக்குமார் இப்போதுதான் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஏடிஎம் வசதி கிடைக்கவில்லை என்ற ஒரு பார்வையற்றவரின் கதறலுக்குத் தீர்வுகிடைத்திருக்கிறது. மீண்டும் இன்னொரு குரல்; இந்தமுறை இந்தியன் வங்கியின் வாடிக்கையாளரிடமிருந்து. பூவிருந்தவல்லி பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பல ஆண்டுகள் பணியாற்றி, ஓய்வுபெற்ற ஆசிரியரான திரு. ரவிக்குமார் அவர்கள், உடல் மற்றும் பார்வைக்குறைபாடு எனஇரண்டு வகையான ஊனங்களால் பாதிக்கப்பட்டவர். தான் வங்கிக்குப் பணம் எடுக்க செல்வதற்கே தனக்கு இன்னொருவரின் துணை தேவைப்படும் நிலையில், வங்கியின் […]