
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கு தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இன்று மார்ச் 15-ந் தேதி, டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்தார்.
அதன்படி, தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறும்.
அஸ்ஸாம், கேரளா, புதுச்சேரியில் ஏப்ரல் 9-ந் தேதி வாக்கு பதிவு நடைபெறும்.
மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23, ஏப்ரல் 29-ந் தேதி என 2 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறும்.
அனைத்து மாநிலங்களிலும் மே 4-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.” என அறிவித்தார்.
தேர்தல் திருவிழா ஆரம்பமாகிவிட்ட இந்த நாளில், நாம் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள மாநிலங்களின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை, அவற்றுள் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் எத்தனை பேர், ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தனை சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன போன்ற விவரங்களை முதலில் அறிய முற்படுவோம். விவரங்களை அறிந்துகொள்ள கீழ்க்கண்ட அட்டவணையைக் கவனமாகப் படிக்கவும்.
| மாநிலம் / யூனியன் பிரதேசம் | சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை | மொத்த வாக்காளர்கள் | மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் | ஆண் வாக்காளர்கள் | பெண் வாக்காளர்கள் | மூன்றாம் பாலினத்தோர் |
| மேற்கு வங்காளம் | 294 | 6,44,52,609* | 4,16,089 | 3,60,22,642 | 3,44,35,260 | 1,152 |
| தமிழ்நாடு | 234 | 5,67,07,380 | 4,63,000 | 2,77,38,925 | 2,89,60,838 | 7,617 |
| கேரளா | 140 | 2,69,53,644 | 2,43,698 | 1,31,26,048 | 1,38,27,319 | 277 |
| அஸ்ஸாம் | 126 | 2,49,58,139 | 2,03,709 | 1,24,82,213 | 1,24,75,583 | 343 |
| புதுச்சேரி | 30 | 9,44,211 | 12,204 | 4,43,595 | 5,00,477 | 139 |
அடுத்து, கட்சி சார்ந்த தேர்தல் அறிக்கைகளில் மாற்றுத்திறனாளிகள் நலன் குறித்து என்னவெல்லாம் சொல்லப்படும் என்பதையும் அறிய எங்களோடு இணைந்திருங்கள்.
***தொகுப்பு: தொடுகை மின்னிதழ்.
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
