எதிர்வரும் 21.ஏப்ரல் திங்கள்கிழமை முதல்
27.ஏப்ரல் ஞாயிற்றுக்கிழமை வரை.
ஒவ்வொரு நாளும் மாலை 6.45 மணி முதல்
இரவு 8 மணிவரை.
மீட்டிங் இணை்ப்பு:
https://us06web.zoom.us/j/82257903105?pwd=688Og7hvBKZqFFxY0z0NL8W9E9L53d.1
மீட்டிங் குறியீடு:
822 5790 3105
கடவுக்குறி: 1212
12ஆம் வகுப்பு முடித்துத் தேர்வு முடிவுக்காகக் காத்திருக்கும் பார்வைத்திறன் குறையுடைய மாணவர்களே!
அடுத்து என்ன படிக்கலாம்? எந்தக் கல்லூரியில் சேரலாம்? நம்மைப் போன்ற பார்வைத்திறன் குறையுடையவர்களுக்கு எந்தப் படிப்பு பொருத்தமானது?
அப்பா, அம்மா, அக்கா, அண்ணன், அக்கம் பக்கம் என ஆளுக்கொன்று சொல்கிறார்கள். இது அது, அது இது என நண்பர்களும் நாளுக்கு ஒன்றைச் சொல்லி நச்சரிக்கிறார்கள்.
என்ன செய்யலாம்? யாரைக் கேட்கலாம்?
எனக் குழம்பிக் குழம்பியே கழிகிறதா உங்கள் கோடை விடுமுறை.
இதோ! உங்கள் குழப்பம் தீர்க்க, கொதிநிலை போக்க
கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும், ஆன்சலிவன் பயிற்சி மையம் இணைய வழியில் உங்களுக்கான வழிகாட்டல் பயிலரங்கை ஒருங்கிணைக்கிறோம்.
எதிர்வரும் ஏப்ரல் 21, திங்கள் கிழமை முதல், ஏப்ரல் 27 ஞாயிற்றுக்கிழமை வரை ஒவ்வொரு நாளும் இரவு ஏழு மணிக்கு, மேலே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைச் சொடுக்கி ஜூ்ம் வழியாக இந்த நிகழ்வில் நீங்கள் நேரடியாகப் பங்கேற்கலாம்.
TNPSC, UPSC, SSC முதலான போட்டித்தேர்வுகள்,
பள்ளிக்கல்வி, உயர்கல்வி, ஆராய்ச்சி படிப்புகள் உள்ளிட்ட கல்வி சார் வாய்ப்புகள்,
IT, Music, Banking AI போன்ற பல்வேறு துறைகளில் பார்வைத்திறன் குறையுடையோருக்கான வாய்ப்புகள்,
கல்விக்காக வழங்கப்படும் பல்வேறு உதவித்தொகைகள் எனப் பல கோணங்களில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு துறைசார் வல்லுநர்களோடு கலந்துரையாடலாம். வழிகாட்டும் வல்லுநர்கள் அனைவரும் உங்கள் வலி மற்றும் வழி அறிந்தவர்கள் என்பதே இந்தப் பயிலரங்கின் கூடுதல் சிறப்பம்சம்.
பிறகென்ன?
உங்கள் ஸ்மார்ட் போனை எடுங்கள்.
ஜூம் செயலியை பதிவிறக்குங்கள்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைச் சொடுக்கி, குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் மாலை 6.45 மணிக்கு நிகழ்ச்சியிஇல் இணையுங்கள்.
இந்த அறிவிப்பினை பார்வைத்திறன் குறையுடைய உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். அவர்களையும் பெருமளவில் பங்கேற்கச் செய்யுங்கள்.
குறிப்பு: அன்றாடம் இடம்பெறும் துறைகள், அவை சார்ந்த வல்லுநர்களின் பெயர்கள் என அனைத்து விவரங்களும் எதிர்வரும் ஏப்ரல் 19, சனிக்கிழமை அன்று தொடுகை மின்னிதழ் வலைதளத்தில் வெளியிடப்படும்.
அதனைப் படிக்க:
வழிகாட்டல் பயிலரங்கின் அனைத்து நிகழ்ச்சிகளும் தொடுகை யூட்டூப் சேனலிலும் நேரலை செய்யப்படும்.
அதற்கான இணைப்பு:
https://www.youtube.com/@thodugai
பயிலரங்கில் பங்கேற்று, உங்கள் எதிர்காலத்தை வளமானதாக மாற்றிக்கொள்ள வாழ்த்துகள்.
இவள்,
U. சித்ரா,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
ஆன்சலிவன் பயிற்சி மையம்.
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
