பூவிருந்தவல்லி, பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் புத்தகக் கட்டுநர்ப் பயிற்சி மூடப்படுவதாகக் கடந்த செப்டம்பர் மாதம் அரசாணை எண் 21 அரசால் வெளியிடப்பட்டது.
அந்த அரசாணை பார்வையற்ற அச்சக ஊழியர்கள் குறித்துப் பல தவறான கருத்துகளை உள்ளடக்கியிருந்தது. எனவே, அந்த அரசாணையை எதிர்க்கும் பொருட்டு, பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் தலைமையில் தமிழகப் பார்வை மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
அரசாணையைக் கடுமையாக எதிர்க்கும் நடவடிக்கையாக, கூட்டமைப்பின் சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்களோடு நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையின் இறுதியில் அரசாணை திரும்பப் பெறப்படுவதாக அரசு அறிவித்தது.
அதன்படி, 23.நவம்பர்.2024 அன்று அரசால் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் அரசாணை 21 ரத்து செய்யப்படுவதாகவும், புத்தகக் கட்டுநர்ப் பயிற்சி தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டது. மேலும், இந்தப் பயிற்சியோடு கூடுதலாக சில பயிற்சிகளும் தொடங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், புத்தகக் கட்டுநர்ப் பயிற்சிக்கான விண்ணப்பப் படிவம் வழங்கப்பட்டு வருகிறது.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 11.டிசம்பர்.2024.
1.நவம்பர்.2024 அன்றைய தேதியில் 16 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
விண்ணப்பத்தைப் படிக்க மற்றும் பதிவிறக்க:
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
