Categories
இலக்கியம் Uncategorized

வாழ்த்து: அகிலமொழிச் சொற்சவுக்கு

மீண்டும் மீண்டும் உளமார்ந்த வாழ்த்துகள்.

குமுறுகிறோம், புலம்புகிறோம், கொந்தளிப்பை எழுதுகிறோம். ஆனால், படிப்பவர் அதே குமுறல்க்காரர். குமுறவைத்தவன் எங்கோ!

நமக்குள்ளேயே புலம்பி, நமக்குள்ளேயே ஆதங்கித்து, நமக்குள்ளேயேஓலமிட்டு உண்டானதுதான் என்ன?

எல்லா ஆதங்கத்தையும், எல்லா ஓலங்களையும், உலக்உக்கு உரைக்க, ஒரு மொழி கிட்டாதா? உலகமே புரிந்துகொள்ள ஒருவன் எடுக்கமாட்டானா அகிலமொழிச் சொற்சவுக்கு என அங்கலாய்த்துக்கொண்டிருக்கையில், அதிர, அதிர ஆங்கிலம் ஏந்தி வந்திருக்கும் டாக்டர். ஊ. மகேந்திரன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

COMERS MANY BUT DOERS NO!

 Danced with commodified glamor,

Now run campaign to win women,

“என்னாத்த சொல்றதுங்க, வடுமாங்கா ஊறுதுங்க.

வடுமாங்கா ஊறட்டுங்கோ!

தயிர்சாதம் ரெடி பண்ணுங்க.

With secrecy piled up,

With virtual followers being pulled up,

எனக்கும் அதே கருத்துதான். உண்மைத்தலைவன் அவ்வப்போது தன் குரலால் பேச வேண்டும். அறிக்கையாழ்வார்களை தெறிக்கவிடுவார்கள் நிச்சயம் நம் தமிழ் மக்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. பார்க்கலாம்.

வாழ்த்துகள்.

OWNING THE DEPARTMENT AND DISOWNING THE DISABLED!

பிற கவிதைகளை ஒப்பிட்டால், இந்தக் கவிதையில் எதுகை மோனையின் நிமித்தம் செயற்கைத்தனங்கள் எட்டிப்பார்க்கின்றன. ஆயினும் அந்த நான்கு வரிகளை அப்படிச் சொல்லிவிட இயலாது. அவை,

He doesn’t spend,

Neither time nor money,

Someone runs our ministry that’s the trend,

Between both we are made unheard cacophony!

இந்தக் கவிதையில் நான் ரசித்த அங்கதம்,

They are untouched as the Sun is bright!

THE UNBELONGING BLIND.

Did anyone tell you are included everywhere?

Orally done plurally not yet!

Walk often to perform blindness,

Not for us but for them,

எங்கேயும், எப்போதும், – உன்னை

இணைத்துக்கொண்டதாய் யார் சொன்னார்கள்? – வெறும்

வார்த்தைக்காய் சொன்னவை அவை,

வழக்கம் அப்படியல்ல. – ஆயினும்,

உனக்காக அல்ல, அவர்களுக்காகத்தான்,

பார்வையின்மை என்னும் நிகழ்த்துகலை நிகழ்ந்திட,

அடிக்கடி உலவிவா என் அப்பனே!

***இப்படித்தான் என் அகமொழிக்குள் இந்தக் கவிதை அமர்ந்திருக்கிறது.

ஆத்திரத்தின் விளைவே என்றாலும், அத்தனையும் காத்திரமான வரிகள்.

இழித்துயர் போக்க, மொழிச்சுடர் ஏந்தியிருக்கும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

இன்னும் இன்னும் நிறைய சவுக்கடிகள் உங்கள் தளத்தின் வாயிலாக எதிர்பார்க்கிறோம்.

https://brighterfighter.blogspot.com/2024/10/the-unbelonging-blind_25.html

***ப. சரவணமணிகண்டன்


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.