தீபாவளிக் கொண்டாட்டத்தைப் பொது உரையாடலாக மாற்ற விரும்பிய ‘தாய்க்கரங்களின்’ முயற்சிக்கு வாழ்த்துகள்.
“வீட்டுக்குப் போகப் பிடிக்கும்தான். ஆனா அங்கே இதெல்லாம் செய்ய விடமாட்டாங்க. அக்கறையினு சொன்னாலும், என்னால முடியும்கிறபோது என் மேல அவுங்களுக்கு நம்பிக்கையில்லையே!” காயத்திரியின் ஆதங்கம்தான் நேற்றிலிருந்து காதுகளில் ஒலித்தபடியே இருக்கிறது. காணொளியின் மொத்த நோக்கத்தை ஒற்றை வரியில் உள்ளடக்கிவிட்ட வாக்கியம் அல்லவா அது.
குறைப்பார்வை இருக்கிறது என்றாலும், பிரெயில்வழிக் கல்விதான் முறையான அடித்தளத்தையும் முழுமையான சுதந்திரத்தையும் கொடுக்கும் என்கிற குழந்தை சுருதிகாவின் புரிதலுக்கு சபாஷ். “இவர்களுக்குத் தேவை எப்போதும் பற்றிக்கொண்டு கூட்டிச் செல்கிற கைகள் அல்ல, இவர்களின் தேவை தாங்களே நடந்து செல்வதற்கான உரிய பாதைகள் மட்டுமே.
இவர்கள் வேண்டுவது பரிவை அல்ல, புரிதல்.
முத்தாய்ப்பாய் முடித்திருக்கும் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கும் உளமார்ந்த நன்றிகள். But one thing,
அன்பளிப்பு கொடுக்கும்போது அந்த சோகராகம் அவ்வளவு சுகமாயிட்டில்ல சேச்சி.
***ப. சரவணமணிகண்டன்
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
