எழுத்தாளர் சாரு நிவேதிதாவுக்கு ஒரு பதில்க்கடிதம்

டியர் சரவணன்
முதலில் என்னை மன்னியுங்கள். நான் நினைத்தது ஒன்று. வார்த்தைகளில் விழுந்தது ஒன்று. இப்போது வாக்கியத்தையே மாற்றி விட்டேன். வேறோர் நண்பரும் எழுதியிருந்தார். மன்னிப்புக் கேளுங்கள் என்றும் கோரியிருந்தார். நான் வாக்கியத்தையே மாற்றி விட்டேன் என்று எழுதி அவரிடம் மன்னிப்பும் கோரியிருந்தேன். அறியாமல் செய்த பிழை. மீண்டும் மன்னிப்பைக் கோருகிறேன்
உங்களிடம் நான் பேச விரும்புகிறேன். மாலை பேசுவேன்.
சாரு.
***
டியர் வெங்கடேஷ்
அந்த வார்த்தையை நான் அந்த அர்த்தத்தில் உபயோகப்படுத்தவில்லை என்றாலும் அது அப்படியும் அர்த்தமாகி விட்டதைப் புரிந்து கொண்டேன். நீக்கி விட்டேன். ஒருபோதும் நான் ஃபிஸிகல் பிரச்சினைகளைப் பொருட்படுத்துபவன் அல்ல. இரக்கம் கூட காட்டுவதில்லை. இரக்கம் காட்டுவது கூட ஒரு மேட்டிமைத்தனம் என்று கருதுபவன். எனக்கு சமமாகவே நினைப்பேன். ஒருநாள் மனுஷ்ய புத்திரன் உடம்பு குண்டாகிக் கொண்டே போகிறது என்று சொன்னபோது வாக்கிங் போங்கள் மனுஷ் என்றேன். அவர் அந்தத் தருணத்தை மறந்திருக்கவே மாட்டார். ஏனென்றால், அவருடைய ஃபிஸிகல் இனபிலிட்டி பற்றி என் பிரக்ஞையிலேயே இல்லை.
வாக்கியத்தை மாற்றி விட்டேன். மன்னியுங்கள்
சாரு
***
குறிப்பு: நமது எதிர்வினை வெளியாகி ஒருமணி நேரத்தில் மின்னஞ்சல் வழியாக மரியாதைக்குரிய எழுத்தாளர் திரு. சாரு நிவேதிதா அவர்கள் மேற்கண்ட பதிலை வழங்கியிருந்தார். அவருடைய சென்னை கட்டுரையிலும் நாம் அதிர்ப்தியுடன் சுட்டியிருந்த வாக்கியத்தை முழுதாகவே நீக்கியும் இருக்கிறார்.
சென்னை
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
