
சரோஜினி தாமோதரன் அறக்கட்டளை தனது வித்யாதன் திட்டத்தில் கல்வி உதவித்தொகை பெற அழைக்கிறது.
இந்த உதவித்தொகை பொருளாதாரத்தில் பின்தங்கிய, ஆண்டு குடும்ப வருமானம் இரண்டு லட்சத்துக்கும் கீழாக இருக்கிற மாணவர்களுக்கானது.
இன்ஃபோசிஸ் துணை நிறுவனர் திரு. S.D. சிபுலால் அவர்களால் நிறுவப்பட்டுள்ள இந்த அறக்கட்டளையின் புரவலர் குமாரி சிபுலால் ஆவார்.
பத்தாம் வகுப்பில் 80 விழுக்காடுக்கு மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற தமிழக மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மாணவர்கள் இந்தக் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளி மாணவர்கள் எனில், 60 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.
தகுதியுடைய மாணவர்கள்,
என்ற இணையதளத்தின் மூலம் எதிர்வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு:
vidyadhan.tamilnadu@sdfoundationindia.com
என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். அல்லது
7339659929 மற்றும்
8792459646
என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள்.
ஆதாரம்: 15/ஜூலை/2022 தி இந்து ஆங்கில நாளிதழின் சென்னைப் பதிப்பு.
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
