Categories
சவால்முரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் அதிரடி மாற்றம்: நீண்ட காலத்திற்குப் பிறகு தமிழ் தெரிந்த அதிகாரிகள் நியமனம்:

பல ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழகத்தைச் சேர்ந்த, தமிழ் தெரிந்த அதிகாரிகள் செயலராகவும், ஆணையராகவும் நியமிக்கப்பட்டிருப்பது மாற்றுத்திறனாளிகளிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நேற்று (12/ஜூன்/2022) பல ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டனர். இவர்களுள் சுகாதாரச் செயலாளராக இருந்த திரு. ராதாகிருஷ்ணன் இஆப அவர்களும் அடக்கம்.

இந்த ஐஏஎஸ் இடமாற்றப் பட்டியலில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையும் இடம்பெற்றிருக்கிறது என்பதுதான் நமக்கான செய்தி. நேற்று தமிழக அரசு அறிவித்த மாற்றப்பட்ட ஐஏஎஸ் பட்டியலில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர் திரு. லால்வேனா இஆப மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் இயக்குநர் திரு. ஜானிடாம் வர்கிஸ் இஆப இருவரின் பெயரும் இடம்பெற்றிருக்கிறது.

இந்த இரு அதிகாரிகளும் மாற்றப்பட்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலராக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு வாரியத்தின் உறுப்பினர் செயலாளராக இருக்கும் திரு. ஆனந்த்குமார் இஐப (R. Anandkumar அவர்களும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையராக வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையராகப் பணியாற்றும் திருமதி. ஜெசிந்தா லாசரஸ் இஆப (Jacintha Lazarus) அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

டாக்டர். R. ஆனந்த்குமார் இஆப:

ஆனந்த்குமார் இஆப

பிறப்பு-9/செப்டம்பர்/1975. கால்நடைத்துறையில் முதுகலைப் படித்து, கால்நடை மருத்துவராகப் பணியாற்றியவர். கடந்த 2003ல் இந்தியக் குடிமைப்பணிகள் தேர்வில் வெற்றிபெற்று, தமிழக கேர்டராகப் பணியேற்றார்.

கவிதைகள், கட்டுரைகள் எழுதும் ஆர்வம் கொண்ட இவர். தனக்கான ஒரு தளத்தை வடிவமைத்து அதில் தன் படைப்புகளை பதிவேற்றியிருக்கிறார்.

திரு. ஆனந்த்குமார் இஆப அவர்களின் இணையதளம்

திருமதி. ஜெசிந்தா லாசரஸ் இஆப:

ஜெசிந்தா லாசரஸ் இஆப

பிறப்பு-18/ஏப்ரல்/1980.

திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரியில் 1997-2000 கல்வியாண்டில் இளங்கலை வணிகவியல் முடித்திருக்கிறார். கடந்த 2005ஆம் ஆண்டு இந்தியக் குடிமைப்பணிகள் தேர்வில் வெற்றிபெற்று, மணிப்பூர் மாநிலத்தின் கேர்டராகப் பதவியேற்றார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழகத்தைச் சேர்ந்த, தமிழ் தெரிந்த அதிகாரிகள் செயலராகவும், ஆணையராகவும் நியமிக்கப்பட்டிருப்பது மாற்றுத்திறனாளிகளிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

***தொகுப்பு: சவால்முரசு ஆசிரியர்க்குழு

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ள லால்வீனா ஐஏஎஸ்: யார் இவர்?

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் மாற்றம், புதிய ஆணையராக திரு. ஜானி டாம் வர்கிஸ் நியமனம்:


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.