
ஆன்சலிவன் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையம் நடத்தும்
‘என்ன படிக்கலாம்?’ பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் பயிலரங்கு:
தினமும் மாலை 7 மணிமுதல் 8 மணிவரை…
பல்வேறு துறைசார் பார்வை மாற்றுத்திறனாளி வல்லுநர்கள் பங்கேற்றுச் சிறப்பிக்கிறார்கள்.
இன்று இறுதி நிகழ்வாக, தகவல் தொழில்நுட்பத்துறை (IT) தொடர்பான படிப்புகள் மற்றும் பணிவாய்ப்புகள் குறித்து திரு. மணிகண்டன் (executive in TCS) மற்றும்
திரு. அருண்குமார் (software engineer in exafluence global analytics) ஆகிய இருவரோடும் உரையாடுகிறார் நமது நெறியாளர் திரு. பாலகிருஷ்ணன் அவர்கள்.
இடம்: ஜூம் அரங்கம்,
மீட்டிங் இணைப்பு:
https://us02web.zoom.us/j/88612982681?pwd=Mkp2UnAvSW9hSVJZdks5Tmp1T25PZz09
மீட்டிங் குறியீடு: 886 1298 2681
கடவுக்குறியீடு: 122022
யூட்டூப் நேரலை: https:///www.youtube.com/c/savaalmurasu
அன்புள்ள பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களே!
மேல்நிலைக்கல்வியை முடித்து அடுத்து என்ன செய்யலாம் என சிந்தித்துக்கொண்டிருக்கிறீர்கள் அல்லவா? உங்கள் முன்னால் இருக்கும் இலக்குகள் ஆயிரம். அதற்கான பாதைகளோ பல்லாயிரம். எந்தப் பாதை உங்களுக்கானது? எதைத் தேர்ந்தெடுப்பது என்பதில் குழப்பம் இருக்கிறதா?
ஆன்சலிவன் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தின் “என்ன படிக்கலாம்” இணையவழி வழிகாட்டல் நிகழ்வில் பங்கேற்று துறைசார் நிபுணர்களிடம் உங்கள் ஐயங்களைக் கேட்டுத் தெளிவு பெறுங்கள்.
இந்தச் செய்தியை உங்கள் பார்வை மாற்றுத்திறனாளி நண்பர்களுக்கும் பகிர்ந்து அவர்களையும் பங்கேற்றுப் பயனடையச் செய்யுங்கள்.
இலக்கை நோக்கிய பயணத்தின் ஓர் இனிய தொடக்கம்…
வாருங்கள்! வளமான வருங்காலம் சமைக்க!
ஊடகத் தோழமை: சவால்முரசு
நமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்!
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
