Categories
அறிவிப்புகள் சவால்முரசு

டிஆர்பி முதுகலை ஆசிரியர்த் தேர்வினை எழுதவுள்ள மாற்றுத்திறனாளிகளின் கவனத்திற்கு

பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளி தேர்வர்கள்
trbchairman@gmail.com
HELP LINE 9444630068,
9444630028
வழியாகத் தொடர்புகொள்ளவும்.

கூகுல் செய்திகளில் எம்மைப் பின்தொடர

எதிர்வரும் 12ஆம் தேதிமுதல் நடைபெறவிருக்கும் டிஆர்பி (TRB) முதுகலைத் தேர்வில் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கின்றனர். ஆனால், அவர்களின் தேர்வு மையங்கள் தங்களின் வசிப்பிடத்திலிருந்து மிகுந்த தொலைவில் இருப்பதாகவும், சில தேர்வுமையங்கள் உரிய போக்குவரத்து வசதியற்ற இடங்களில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகள் சங்கம் முதல்வருக்கும், ஆசிரியர்த் தேர்வு வாரியத்தின் தலைவருக்கும் தனித்தனியே கடிதங்கள் எழுதி, உரிய வாய்ப்புகள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்குவதை உறுதிசெய்யும் பொருட்டு, குறைந்தபட்சம் மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்காவது தேர்வுகளை ஒத்திவைத்து நடத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில், பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் பொறுப்புத்தலைவர் திரு. அரங்கராஜா அவர்கள், ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில்,

“அவசரம் அனைவருக்கும் விரைவாக பகிரவும்.

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வினை எழுதவிருக்கும் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு தொலைதூரத்தில் தேர்வு மையம் கொடுக்கப்பட்டிருந்தால், நீங்கள் trbchairman@gmail.com

HELP LINE  9444630068,

9444630028

என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது தேர்வு மையத்தை மாற்ற கோரிக்கைவிடுக்கலாம். தங்களது கோரிக்கை விரைவாக ஏற்கப்பட்டு, தேர்வு மையம் உங்களின் முகவரிக்கு  அருகாமையில் வழங்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்கள்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டுள்ள  மாற்றுத்திறனாளி தேர்வர்கள் இந்தப் பதிவினைப் படித்து, உரியவர்களைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.