தமிழகத்தில் 10,11,12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் எதிர்வரும் ஏப்ரல் இறுதியில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்வில் பங்கேற்க இருக்கிற மாற்றுத்திறனாளி மாணவர்கள், தேர்வெழுத தங்களுக்கு பதிலி எழுத்தர் போன்ற ஏதேனும் சிறப்புத் தேவைகள் அல்லது உதவிகள் தேவைப்பட்டால், அதனைக் குறிப்பிட்டு, தங்கள் பள்ளித் தலைமை ஆசிரியர் வாயிலாக எதிர்வரும் 13ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அரசு தேர்வுகள் இயக்ககம் கேட்டுக்கொண்டுள்ளது.
மாற்றுத்திறனாளி மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான மாதிரிப்படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
