Categories
சவால்முரசு வேலைவாய்ப்பு

ஒரு முக்கிய விளக்கம்

பெரும்பாலான வாசகர்கள் தகவல்கள் போதுமானதாக இல்லை என தங்களின் கவலையை நமக்குத் தெரிவித்திருக்கிறார்கள்.

ரைட்ஸ் திட்டத்தைச் செயல்படுத்தும் பொருட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகம் ஒப்பந்த அடிப்படையிலான பணி நியமனங்களை மேற்கொள்ள ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிவிப்பை இணைத்து நேற்று சவால்முரசு தளத்தில்

செய்தி

ஒன்றை வெளியிட்டிருந்தோம். அந்தச் செய்தியின் ஒலிப்பதிவும் சவால்முரசு யூட்டூப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெரும்பாலான வாசகர்கள் தகவல்கள் போதுமானதாக இல்லை என தங்களின் கவலையை நமக்குத் தெரிவித்திருக்கிறார்கள். அந்த வாசகர்களின் கவனத்திற்கு,

நாம் வெளியிட்டுள்ள செய்தியின் இறுதியில் ஒரு

இணைப்பைத்

தந்துள்ளோம். அந்த இணைப்பைச் சொடுக்கினால், பிடிஎஃப்திறக்கும். அந்த பிடிஎஃப் கோப்பில் திட்ட மேலாளர் (project manager) தொடங்கி அலுவலக உதவியாளர் (office assistant) வரை வெவ்வேறு வகையிலான சுமார் 25 பணி நியமனங்களுக்கான நோக்கங்கள், அந்தப் பணிகளுக்குத் தேவையான தகுதிகள், பணி செய்ய வேண்டிய இடம், ஊதிய விகிதம், விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள், விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி என அனைத்து விவரங்களும் அந்தந்த பணிகளுக்கான பிரத்யேக சுட்டிகளாக அந்த பிடிஎஃப் பக்கத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளன.

தெரிந்துகொள்ள மற்றும் விண்ணப்பிக்க விரும்புபவர்கள், நாம் கொடுத்துள்ள அந்த இணைப்பைச் சொடுக்கி மேலதிக விவரங்களைப் பெறலாம்.

குறிப்பு: மொபைலைவிட கணினியில் அந்த பிடிஎஃப் கோப்பினை அணுகுவது இன்னும் எளிமையானதாக இருக்கிறது.

***ப. சரவணமணிகண்டன்


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.