Categories
அரசாணைகள்/ஆவணங்கள்/கடிதங்கள் சவால்முரசு தமிழக அரசு

முதல்வரைச் சந்தித்த தேசிய விருது பெற்ற ஆறு மாற்றுத்திறனாளிகள்: முதல்வர் வாழ்த்து

பார்வைத்திறன் குறைவுடையோர் பிரிவில் சிறந்த பணியாளர் மற்றும் சுயதொழில் புரியும் மாற்றுத் திறனாளிகள் விருதினை பெற்றவர் தமிழகத்தை சேர்ந்த வேங்கட கிருஷ்ணன் மற்றும் ஏழுமலை பெற்றுள்ளனர்.

மாற்றுத்திறனாளிகள் உரிமை ஏற்றத்திற்கான தேசிய விருது பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த 6 மாற்றுத்திறனாளிகள் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

தமிழக அரசின் செய்திக்குறிப்பு

“சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி 3.12.2021 அன்று டெல்லியில் மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் உரிமை ஏற்றத்திற்கான தேசிய விருது வழங்கும் விழாவில், இந்திய குடியரசுத் தலைவரால் சிறந்த பணியாளர் மற்றும் சுயதொழில் புரியும் மாற்றுத் திறனாளிகள், சிறந்த சான்றாளர் மற்றும் முன்னுதாரண பொன்ற விருதுகளை பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த 6 மாற்றுத்திறனாளிகள் தமிழக முதல்வர் ஸ்டாலினை இன்று (8.12.2021) தலைமைச் செயலகத்தில், நேரில் சந்தித்து, அவ்விருதுகளை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி 3.12.2021 அன்று டெல்லியில் மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் உரிமை ஏற்றத்திற்கான தேசிய விருது வழங்கும் விழாவில், பார்வைத்திறன் குறைவுடையோர் பிரிவில் சிறந்த பணியாளர் மற்றும் சுயதொழில் புரியும் மாற்றுத் திறனாளிகள் விருதினை பெற்றவர் தமிழகத்தை சேர்ந்த வேங்கட கிருஷ்ணன் மற்றும் ஏழுமலை பெற்றுள்ளனர்.

அறிவுசார் குறைபாடுடையோர் பிரிவில் சிறந்த பணியாளர் மற்றும் சுயதொழில் புரியும் மாற்றுத் திறனாளிகள் விருதினை தமிழகம் சார்பில் தினேஷ் என்பவர் பெற்றுள்ளனர்,

பல்வகை குறைபாடுடையோர் பிரிவில் சிறந்த பணியாளர் மற்றும் சுயதொழில் புரியும் மாற்றுத் திறனாளிகள் விருதினை மானகஷா தண்டபாணி பெற்றுள்ளனர்,

பல்வகை குறைபாடுடையோர் பிரிவில் சிறந்த சான்றாளர் மற்றும் முன்னுதாரண விருதினை ஜோதி மற்றும் பிரபாகரன் ஆகியோர் பெற்றுள்ளனர்.”

இவ்வாறு அரசு வெளியிட்ட  செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.