Categories
பயிலரங்குகள்/கூடுகைகள்

நிகழ்வு: ஹெலன்கெல்லர் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தின் முதலாம் ஆண்டு கொண்டாட்டம்: பயிற்சி மாணவர்களுக்கான வினாடி வினா போட்டி

போட்டி முதன்முறையாக சவால்முரசு யூட்டூப் தளத்திலும், சவால்முரசு கிளப் ஹவுஸ் அறையிலும் ஒரே நேரத்தில் நேரலை செய்யப்பட உள்ளது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

graphic சங்கப்பதாகையின் முன் நிற்கும் தலைவர் சித்ரா
தலைவர் சித்ரா

நாள்: செப்டம்பர் 5 ஞாயிற்றுக்கிழமை,

நேரம்: காலை 10.30 மணி,

நேரலைக்கான இணைப்புகள்:

யூட்டூப்: https://www.youtube.com/channel/UCULghK3SBGOeJJZ4VFvjJQQ/featured?view_as=public

கிளப் ஹவுஸ்: https://www.clubhouse.com/event/MOvBWLVQ

பணிவாய்ப்பு நாடும் பார்வையற்றவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில், இனி போட்டித்தேர்வுகள்தான் முக்கியப் பங்காற்றப்போகின்றன என்ற நிதர்சனத்திற்கு முகம் கொடுத்து, அந்தச் சவாலை எதிர்கொள்ள பார்வையற்ற மாணவர்களுக்குப் பயிற்சியும் வழிகாட்டலும் வழங்குவது என முடிவு செய்தார் ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் தலைவர் செல்வி U. சித்ரா அவர்கள். சங்கத்தின் வழிமொழிதலோடு, ஹெலன்கெல்லர் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையம் (Coaching Centre for Competitive Exams CCC by Helenkeller for Visually Impaired) என்ற பெயரில், தனது நேரடிக் கண்காணிப்பிலும், ஒருங்கிணைப்பிலும் அன்றாட இணையவழிப் பயிற்சி வகுப்புகளை கடந்த செப்டம்பர் 9 2020 முதல் நடத்தி வருகிறார் அவர்.

இந்தப் பயிற்சி மையத்தில், பல்வேறு துறைசார் அற்இவுபெற்ற வல்லுநர்கள் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தி வருகிறார்கள். சான்றாக, கடந்த ஆண்டு இந்தியக் குடிமைப்பணிகள் தேர்வில் வெற்றிபெற்ற திரு. பாலநாகேந்திரன் அவர்கள் மாணவர்களுக்கு கணிதம், பொருளியல் ஆகிய பாடங்களை நடத்தி வருகிறார்.

பயிற்சி மையத்தின் முதலாம் ஆண்டு தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, மையத்தில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கிடையே வினாடிவினா போட்டி ஜூம் தளத்தில் நடத்தப்பட உள்ளது. இந்தப் போட்டியினை, கூட்டுறவுத்துறையில் ஆய்வாளராகப் பணிபுரிபவரும், மையத்தின் புவியியல் மற்றும் தமிழ்நாடு நிர்வாகம் போன்ற வகுப்புகளைக் கற்பிக்கும் பயிற்றுனருமான திரு. சௌண்டப்பன் அவர்கள் ஒருங்கிணைத்து நடத்தவிருக்கிறார்.

இந்தப் போட்டி முதன்முறையாக சவால்முரசு யூட்டூப் தளத்திலும், சவால்முரசு கிளப் ஹவுஸ் அறையிலும் ஒரே நேரத்தில் நேரலை செய்யப்பட உள்ளது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

பார்வையாளர்களாகப் பெருமளவில் பங்கேற்று நிகழ்விற்கு ஆதரவு வழங்குமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவர்கள்,

தலைவர் மற்றும் செயலர்

ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம்.

ஊடகத்தோழமை: சவால்முரசு.

நமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்.


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.