செவித்திறன் குறையுடைய மாணவர்கள் சிலர் சமையல் தொடர்பான பட்டயப் படிப்பில் முதல் முறையாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அவர்களின் இந்தச் சாதனை அவர்களுக்கான ஒரு புதிய வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளது.
சில நாட்களுக்கு முன் நாங்கள் எங்கள் சங்கத்தின் சார்பாக ஆணையர் அலுவலக உயர் அதிகாரிகளைச் சந்தித்தபோது பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளிகளில் பார்வையற்றவர்கள் ஆசிரியர்களாகப் பணிபுரிவதுபோல செவித்திறன் குறையுடையோருக்கான சிறப்பு பள்ளிகளில் செவித்திறன் குறையுடைய பணியாளர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம்.
செவித்திறன் குறையுடைய பள்ளிகளில் விடுதிப் பணியாளர்களாகவும், உடற்கல்வி ஆசிரியர்களாகவும், ஓவிய ஆசிரியர்களாகவும் அவர்களை நியமிக்கலாம் என நாங்கள் அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினோம்.
தற்போது இந்த மாணவர்கள் பெற்றிருக்கிற வெற்றி எமது ஆலோசனைகளுக்கு வலு சேர்ப்பதாக உள்ளது.
இந்த மாணவர்களின் சாதனைக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து உதவிய அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகள்.
இந்தத் தகவலை விரிவாகப் படிக்க கீழே உள்ள முகநூல் சுட்டியை கிளிக் செய்யவும்
https://m.facebook.com/story.php?story_fbid=990602115059944&id=100023304939396
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
