
அன்பு வாசகர்களே!
மாற்றுத்திறனாளிகள் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், சமகால முக்கிய நிகழ்வுகளை ஆவணப்படுத்திவரும்மாற்றுத்திறனாளிகளுக்கான தமிழின் முதல் செய்தித்தளமான சவால்முரசு, இப்போது க்லப் ஹவுஸ் அரங்கிலும் உங்கள் மேலான பங்கேற்போடு, தனது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்யவிருக்கிறது.
இன்று காலை கூட்டப்பட்டுள்ள முதல் அரங்கிற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறது உங்கள் சவால்முரசு.

தலைப்பு: பார்வையற்றோரின் பொருளாதார சுதந்திரம்:
நாள்: இன்று (25/ஜூலை/2021),
நேரம்: காலை 11 மணி,
நிகழ்விற்கான இணைப்பு: https://www.clubhouse.com/event/mylEY4yV
எந்த ஒரு விளிம்புநிலைச் சமூகமும் அதன் வளர்ச்சிப் பாதையில் எட்ட வேண்டிய முதன்மையான இலக்கு பொருளாதாரச் சுதந்திரம். அந்த வகையில், பார்வையற்றோர் சமூகம் பொருளாதாரச் சுதந்திரம் என்ற இலக்கை அடைவதில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தீர்வுகள் குறித்துப் பேசுவோம், பேசியதைத் தொகுப்போம், தொகுத்தவற்றைப் பகுத்து தீர்வுகள் தேடுவோம்.
உங்களின் மேலான ஆதரவை எதிர்பார்த்து
சவால்முரசு: ‘நமக்கான ஊடகம், நமக்கு நாமே ஊடகம்.
வலைதளம்: https://savaalmurasu.com
குரலால் இணைவோம், கோருவோம் சமத்துவம்
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
