பேராசிரியர் திரு. தீபக்நாதன் அவர்களின் தலைமையிலான டிசம்பர் 3 இயக்கம், மாநில கொள்கை வளர்ச்சிக் குழுவின் துணைத்தலைவரான பேராசிரியர் திரு. ஜெயரஞ்சன் அவர்களைச் சந்தித்து,மாற்றுத்திறனாளிகள் தொடர்பான 19 அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றினை வழங்கியிருக்கிறது.
ஒவ்வொரு கோரிக்கையும் நன்கு ஆராயப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு தொடங்கி, மாற்றுத்திறனாளிகளுக்கான அசையும் மற்றும் அசையா சொத்துகளைப் பதியும்போது, பதிவுக் கட்டணம் முற்றிலுமாக ரத்து செய்யப்பட வேண்டும் என அனைத்துத் தளங்களையும் பயன்படுத்தி மாற்றுத்திறனாளிகள் வளர்ச்சியை மேம்படுத்துவது குறித்து திட்டமிடப்பட்ட கொள்கை ஆவணமாகவே இந்த மனு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
![DECEMBER
DECEMBER 3 MOVEMENT
Collective Voice of Persons with Disabilities ( Affiliated to Asia Pactile Disabled Person , Craganization United , Bangkok , Thailand ) G - 2 , B - Block , Nebuks Flats , Metavattam , Chentai - 600 100. Tamilnadu , India ,
Call : 9540540953 E - mail deepalnathanapriail.com T.M.N.Deepak S.Annamalai ar , B.Varadan a.com MEAL , V.Mohan Ra ] P.Saravanan MSM MS . Lancai ) 13 ,
General Sectatory Treasurer Vice Prpaident Deputy General Secretary President
MOVEMENT
பெறுநர் ,
நாள் : 22-07-2021 மாண்புமிகு முனைவர் ப.ஜெயரஞ்சன் , அவர்கள் துணை தலைவர் மற்றும் தமிழ்நாடு மாநில வளர்ச்சி கொள்கை குழு , எழிலகம் , சென்னை தமிழ்நாடு மாநில வளர்ச்சி கொள்கை குழு முன்பு வைக்கும்
மாற்றுத்திறனாளிகளின் முக்கிய கோரிக்கைகள்
1. தமிழகத்தில் உள்ள நகர உள்ளாட்சிகளான பேரூராட்சிகள் , நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் ஆகியவற்றுக்கும் மூன்றடுக்கு கிராம ஊராட்சிகளான சிற்றூராட்சிகள் - ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகள் ஆகிய அனைத்து உள்ளாட்சி அரசாங்கங்களுக்கான பொறுப்புகளுக்குப் பட்டியல் பிரிவினர் . பட்டியல் பழங்குடியினர் மற்றும் மகளிருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது . இது குறிப்பிட்ட அந்த சமூகத்தின் மேம்பாட்டுக்காக பெரும் பங்காற்றி வருவதை நாம் பார்த்து வருகிறோம் . அந்த வகையில் மக்களுக்கு மிக அருகிலிருந்து இயங்கிக் கொண்டிருக்கும் உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிய பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தவும் அவர்களுக்கான நலத்திட்டங்களும் உதவிகளும் உரிய முறையில் சென்றடையவும் அனைத்து உள்ளாட்சி பதவிகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடும் கட்டாயமாக இருக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது டிசம்பர் 3 இயக்கம் . அந்த வகையில் தமிழகத்தின் அனைத்து உள்ளாட்சி பதவிகளுக்கான இட ஒதுக்கீட்டில் 5 சதவீத இட ஒதுக்கீடு மாற்றுத் திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம் .](https://savaalmurasu.files.wordpress.com/2021/07/december-jeyaranjan-1.jpg)




எதிர்காலங்களில் அரசால் நிர்மாணிக்கப்படும் புதிய கட்டடங்கள், சட்டமன்றத்தில் கொண்டுவரப்படும் புதிய சட்டங்கள் என அனைத்தையும் நிறைவேற்றுவதற்கு முன்பாக, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தின் கருத்துகள் கேட்கப்பட வேண்டும் என்கிற பரிந்துரை மிக முக்கியமானது. இது துறையின் தலைவரே சிந்திக்கவோ முன்வைக்கவோ தயங்கும் ஒரு அம்சம்.
ஒரு மாற்றுத்திறனாள்ளி என்ற முறையில், திரு. தீபக்நாதன் அவர்களுக்கும் அவரின் டிசம்பர் 3 இயக்கத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும்.
திரு. தீபக்நாதன் அவர்களின் முகநூல்ப் பதிவைக்காண
***
ப. சரவணமணிகண்டன்
தொடர்புக்கு: vaazhgavalluvam@gmail.com
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
