Categories
அணுகல் கோரிக்கைகள் தொழில்நுட்பம்

கேப்ச்சர் கேட்கிறது: தமிழக அரசுக்கு நன்றி

சில நாட்களுக்கு முன்பு,

https://ereceipt.tn.gov.in/cmprf/Interface/CMPRF/CMPRF_EntryForm

https://eregister.tnega.org/#/user/pass

என்ற தமிழக அரசின் இந்த இரண்டு இணையதளங்களில் Capture Code Verification

என்ற முறை பார்வையற்றோர் பயன்பாட்டிற்கு உகந்ததாக இல்லை என நமது சவால்முரசு தளத்தில்

தமிழக அரசின் இணைய வடிவமைப்பாளர்கள் கவனத்திற்கு

என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தோம். அந்தக் கட்டுரையில், capture code பகுதியில் ஒலிவடிவிலான தெரிவை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

முதல்வரின் நிவாரண நிதிக்கான தளத்தின் புகைப்படம்
முதல்வரின் நிவாரண நிதிக்கான தளம்
தமிழக அரசின் ஈ பதிவுத்தளத்தின் புகைப்படம்
தமிழக அரசின் ஈ பதிவு தளம்

இப்போது இந்த இரண்டு இணையதளங்களிலும் capture code பகுதியில் ஒலிவடிவிலான தெரிவும் இணைக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியைத் தருகிறது. சிறிதினும் சிறிதான குரல்களும் தமிழக அரசால் உண்ணிப்பாகக் கவனிக்கப்படுவது பெரும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

 தமிழக அரசுக்கு பார்வையற்றோரின் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். அத்தோடு, ஈ பதிவு செய்கையில், தேதி தேர்ந்தெடுக்கும் நடைமுறையில் பார்வையற்றோர் எதிர்கொள்ளும் சிக்கலும் விரைவில் களையப்படும் எனவும் உறுதியாக நம்புகிறோம்.


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.