Categories
செய்தி உலா

நன்றி மாலைமலர்: அரும்பாவூரில் கிணற்றில் பிணமாக மிதந்த மாற்றுத்திறனாளி: கொலையா? போலீசார் விசாரணை.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ஆறுமுகம் (வயது 27). மாற்றுத்திறனாளியான இவர் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் தீபாவளியன்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

மாலைமலர் லோகோ

வேப்பந்தட்டை:

அவரது குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். அந்நிலையில் அரும்பாவூர் திரவுபதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான கிணற்றில் ஆறுமுகம் நேற்று பிணமாக மிதந்தார். இதைக்கண்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதைத்தொடர்ந்து கிணற்றில் மிதந்த ஆறுமுகத்தின் உடலை அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

இது தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஆறுமுகம் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் அவரை கொலை செய்து உடலை கிணற்றில் வீசிச்சென்றார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5:30

Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.