Categories
அறிவிப்புகள் உரிமை செய்தி உலா வகைப்படுத்தப்படாதது

நவம்பர் 17, டாராடாக் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் பாதுகாப்போர் சங்கம் டாராடாக் எதிர்வரும் நவம்பர் 17ஆம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்தவிருப்பதாக நேற்று அந்தச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டாராடாக் லோகோ
டாராடாக் லோகோ
  1. அண்டை மாநிலங்கள் போல மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையினை உயர்த்தி வழங்க வேண்டும்.
  2. தனியார்த்துறையின் பணிவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஐந்து விழுக்காடு ஒதுக்கீடு செய்ய நிறுவனங்களை அரசு ஊக்குவிக்க வேண்டும்.
  3. 2013 உச்சநீதிமன்ற தீர்ப்பினை உடனடியாக அமல்ப்படுத்தி, மாற்றுத்திறனாளிகளுக்கான பின்னடைவுக் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். ஆகிய மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் பாதுகாப்போர் சங்கம் டாராடாக் எதிர்வரும் நவம்பர் 17ஆம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்தவிருப்பதாக நேற்று அந்தச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கைகளைத் தனது மாநிலக்குழு கூட்டத்தில் தீர்மானங்களாக நிறைவேற்றி ஏற்கனவே அதனை முதல்வரின் கவனத்திற்கும் அனுப்பியிருக்கிறது டாராடாக். இதுகுறித்து, “மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு: டாராடாக் நிறைவேற்றிய முத்தான மூன்று தீர்மானங்கள்” என்ற தலைப்பில் சவால்முரசு செய்தி வெளியிட்டிருந்தது. இந்நிலையில், இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 17ஆம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.