Categories
கோரிக்கைகள் செய்தி உலா

மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு: டாராடாக் நிறைவேற்றிய முத்தான மூன்று தீர்மானங்கள்

அண்டை மாநிலங்களான புதுச்சேரி மற்றும் தெளுங்கானாவைப்போல, மாதாந்திர உதவித்தொகையை குறைந்தபட்சம் ரூ. 3000ஆகவும், கடும் பாதிப்புக்குள்ளான மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையினை ரூ. 5000ஆகவும் உயர்த்தி வழங்கிட வேண்டும்

நம்புராஜன்
நம்புராஜன்

அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்போருக்கான சங்கம் டாராடாக் தனது மாநிலக்குழு கூட்டத்தில் முக்கிய மூன்று தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் உடனடி நடவடிக்கை கோரி கடிதம் வாயிலாக முதல்வருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

  1. அண்டை மாநிலங்களான புதுச்சேரி மற்றும் தெளுங்கானாவைப்போல, மாதாந்திர உதவித்தொகையை குறைந்தபட்சம் ரூ. 3000ஆகவும், கடும் பாதிப்புக்குள்ளான மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையினை ரூ. 5000ஆகவும் உயர்த்தி வழங்கிட வேண்டும் என முக்கியமானதற்போதைய சூழலுக்கு அவசியமான கோரிக்கையினை வலியுறுத்துகிறது முதல் தீர்மானம்.
  2.  தற்போது அமலில்லுள்ள ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் 2016ன்படி, தனியார் நிறுவனங்கள் ஐந்த்உ விழுக்காடு ஒதுக்கீட்டினைப் பின்பற்றி, மாற்றுத்திறனாளிகளைப் பணியிலமர்த்த அரசு வலியுறுத்துவதோடு, அதற்கான ஊக்குவிப்பு நடவடிக்கைகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என இரண்டாவது தீர்மானம் அரசை வலியுறுத்துகிறது.
  3.  மாநிலத்திலுள்ள பின்னடைவுக் காலிப்பணியிடங்களை உடனடியாகக் கண்டறிந்து, அடுத்த மூன்று மாதங்களுக்குள் அவற்றை நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 03.10.2013 அன்று உச்சநீதிமன்றம் முக்கியமான தீர்ப்பினை வழங்கியது. அந்தத் தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்கும் நிலையில், உடனடியாகத் தீர்ப்பினைப் பின்பற்றி, அனைத்துத் துறைகளிலும் காலியாக உள்ள பின்னடைவுப் பணியிடங்களை அடையாளம் கண்டு நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூன்றாவது தீர்மானம் வலியுறுத்துகிறது.

Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

2 replies on “மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு: டாராடாக் நிறைவேற்றிய முத்தான மூன்று தீர்மானங்கள்”

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.