
துபாயில் நடக்க உள்ள, மாற்றுத் திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டிகளில், சென்னை அணி சார்பில் விளையாட, கம்பம் வீரர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
மாற்றுத் திறனாளிகளுக்கென, 20 ஓவர்கள் கொண்ட டி.பி.எல்., கிரிக்கெட் போட்டிகள் துபாயில், நவ., 2 முதல் நவ., 8 வரை நடக்கிறது. இதில், சென்னை அணி சார்பில் விளையாட, சென்னை சூப்பர் ஸ்டார் அணிக்கு, 11 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இவர்களில், தேனி மாவட்டம், கம்பம் தாத்தப்பன்குளத்தைச் சேர்ந்த சுருளிவேல் மகன் சிவகுமார், 32, ஒருவர்.
ஐந்து சகோதரிகள், ஒரு சகோதரர் உடன் பிறந்தவர்கள்.மிகவும் ஏழ்மை குடும்பத்தைச் சேர்ந்த இவர், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு முடித்துள்ளார். சிறுவயதில் இளம்பிள்ளை வாதம் தாக்கியதால், இடது கால் பாதிப்படைந்தது. கிரிக்கெட் மீதான ஆர்வத்தால், பயிற்சி பெற்று, உள்ளூர் போட்டிகளில் பங்கேற்றார்.
இவரது திறமையை பார்த்த சிலர், இவருக்கு ஊக்கம் தந்து, அகில இந்திய அளவில் விளையாட வைத்தனர். செப்டம்பரில் தேனியில் நடக்கவிருந்த, இந்தியா – இலங்கை போட்டியில் விளையாட தேர்வாகிஇருந்தார். ஆனால், கொரோனா ஊரடங்கால், அந்த போட்டி ரத்து செய்யப்பட்டது.
தற்போது, துபாய் போட்டிக்காக, டில்லி செல்ல பண வசதியில்லாமல் சிரமப்படுகிறார். இவருக்கு உதவ, 89711 77711 என்ற மொபைல் எண்ணில் அழைக்கலாம்.
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
