Categories
செய்தி உலா

நன்றி தி இந்து ஆங்கில மின்னிதழ்: “அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன” உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தார் சாய்பாபா

பேராசிரியர் G.N. சாய்பாபா போலியோவால் பாதிக்கப்பட்ட, சர்க்கர நாற்காலி பயன்படுத்துகிற மாற்றுத்திறனாளி ஆவார்.

செய்தியைத் தாங்கிய தி இந்து ஆங்கில மின்னிதழ் பக்கம்
பட மூலம், தி இந்து ஆங்கில மின்னிதழ்

மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்துக்கொண்ட குற்றத்திற்காய், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் நாக்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியர் G.N. சாய்பாபா போலியோவால் பாதிக்கப்பட்ட, சர்க்கர நாற்காலி பயன்படுத்துகிற மாற்றுத்திறனாளி ஆவார்.

தனக்கு சிறையில் மருந்துகள், புத்தகங்கள் மற்றும் உடைகள் போன்ற அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதாகவும், இதனை எதிர்த்து எதிர்வரும் அக்டோபர் 21ஆம் தேதி முதல் சிறையி் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார். திரு. சாய்பாபா ரத்த அழுத்தம், கணைய ஒவ்வாமை, இதயம் சார் பாதிப்புகள் மற்றும் நாட்பட்ட முதுகுவலியுடன் அவதிப்படுகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

அவருக்கு பல காலமாகவே அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதாகவும், கடந்த ஒரு மாதத்திற்கு தன்னிடமிருந்து எந்த ஒரு தொலைபேசி அலைப்பு மற்றும் கடிதங்களை சிறை நிர்வாகம் அனுமதிக்கவில்லை எனக் குற்றம் சாட்டுகிறார் சாய்பாபாவின் மனைவி வசந்தகுமாரி.

மேற்கண்ட குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை எனச் சொல்லும் நாக்பூர் சிறை கண்காணிப்பாளர் அனுப்குமார், கரோனா பேரிடர் தொடங்கியது முதலாகவே சிறையில் செய்தித்தாள்கள் அனுமதிப்பதை நிறுத்தியிருக்கிறோம். மற்றபடி, அவருக்குத் தேவையானவை அனைத்தும் உரிய பரிசீளனைகளுக்குப் பிறகு வழங்கப்படுகின்றன என்றார்.


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.