Categories
கலை காணொளிகள் வகைப்படுத்தப்படாதது

“Keep on Telling” அன்பும் அறிவும் கலந்த ஓர் பரஸ்பர உரையாடல்

உலக வெண்கோல் தினத்தில், பார்வையற்றோர் குறித்த சில புரிதல்களைப் பொதுச் சமூகத்தில் ஏற்படுத்தும் நோக்கத்தோடு வெளிவந்து்ள படைப்பான “Keep on Telling” பாருங்கள். படத்தையும், படத்தில் சொன்ன சின்னச் சின்ன விடையங்களையும் அனைவருக்கும் பகிருங்கள்.

Keep on Telling குறும்பட போஸ்டர்
போஸ்டர்

சவால்முரசு குழுவினரின் புது முயற்சியாக வெளிவந்துள்ள விழிப்புணர்வுக் குறும்படம் “Keep on Telling”. ரெட்மி நோட் 8 ப்ரோ செல்பேசியை வைத்துக்கொண்டு, ப. சரவணமணிகண்டனின் திரைக்கதையை இயக்கி, ஒளிப்பதிவு செய்து, படத்தொகுப்பு மற்றும் ஒருங்கிணைப்பு என நேரத்தைப் பொருட்படுத்தாமல் படத்தின் நேர்த்திக்காய்  உழைத்திருக்கிறார் கிரிஸ்டோபர். ஒலிக்கோர்ப்பில் உதவி, துணைத்தலைப்புகள் சேர்த்தல் என குறும்படம் வெளிவருவதி் பெருந்துணை புரிந்திருக்கிறார் படத்தில் அன்புவாக நடித்துள்ள வெரோனிக்கா மோனிஷா.

இந்தக் கரு குறித்து, சில மாதங்களுக்கு முன் சரவணமணிகண்டன் ஒருவரி சொன்ன அந்த நிமிடம் தொடங்கி, 15 அக்டோபர் காலை ஆறுமணிக்கு இந்தக் குறும்பட யூட்டூப் தொடுப்பை பரப்புவதுவரை ஒரே மூச்சாகத் திட்டமிடல், ஒருங்கிணைப்பு எனச் சுழன்றிருக்கிறார் படத்தில் அறிவாக அசத்தியிருக்கும் சித்ரா உபகாரம்.

உலக வெண்கோல் தினத்தில், பார்வையற்றோர் குறித்த சில புரிதல்களைப் பொதுச் eசமூகத்தில் ஏற்படுத்தும் நோக்கத்தோடு வெளிவந்து்ள படைப்பான “Keep on Telling” பாருங்கள். படத்தையும், படத்தில் சொன்ன சின்னச் சின்ன விடையங்களையும் அனைவருக்கும் பகிருங்கள்.


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.