Categories
braille editorial education

சொல்லுங்கள்! என்ன செய்யலாம்?

31 ஜூலை, 2020 பொதுத்தேர்வு முடிவுகளைத் தாங்கி வந்த கடந்த ஜூலை மாதமானது,, ஓவியா, காவியா என்ற இரண்டு திறமையான எதிர்கால நம்பிக்கைகளை பார்வை மாற்றுத்திறனாளி சமூகத்திற்கு அறிமுகம் செய்து சென்றிருக்கிறது. முன்னவர், பதிலி எழுத்தர் துணையின்றி மடிக்கணினியைப் பயன்படுத்தி சிபிஎஸ்ஈ பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை தானே எழுதி, 500க்கு 447 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தவர். பின்னவர் மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்று, பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் 600க்கு 571 மதிப்பெண்கள் பெற்று அசத்தியிருக்கிறார். இருவரின் பேட்டிகளையும் […]

Categories
CCPD interviews P.K. Pincha

“ஆணையருக்கு சத்து இருக்குமானால், அந்தச் சட்டம் புத்துயிர் பெற்று முறையாக நடைமுறைக்கு வரும்தானே?”

31 ஜூலை, 2020 இடது ரகுராமன், வலது P.K. பின்ச்சா கடந்த 2012 ஆம்ஆண்டு,  வள்ளுவன் பார்வை இணையக் குழுமத்தின் வெற்றித் திலகம் நிகழ்ச்சியில் கர்ண வித்யா அமைப்பைச் சேர்ந்த திரு ரகுராமன் அவர்கள், இந்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான முதன்மை ஆணையராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பார்வையற்றவராகிய மறைந்த திரு பீ.கே. பிஞ்ச்சா( பிரசன்ன குமார் பிஞ்ச்சா 1952 –  2020) அவர்களுடன் ஆங்கிலத்தில் நிகழ்த்திய அலைபேசி உரையாடல் ஒளிபரப்பப்பட்டது. திரு. பின்ச்சா அவர்களின் மறைவை நினைவுகூரும் பொருட்டு, […]

Categories
condolence P.K. Pincha personalities

யாருக்காக அழுதபோதும் தலைவனாகலாம்

31 ஜூலை, 2020 P.K. பின்ச்சா ஜூலை 26 ஞாயிற்றுக்கிழமை காலை, டில்லியில் ஒரு தனியார் மருத்துவமனையில் தனது இறுதி மூச்சை சுவாசித்தார் ஊனமுற்றோருக்கான நடுவண் மேனாள் தலைமை ஆணையர் (Chief Commissioner for Persons with Disabled) திரு. பிரசன்னக்குமார் பின்ச்சா அவர்கள். இந்தச் செய்தியைக் கேட்ட ஒட்டுமொத்த இந்திய ஊனமுற்றோர் சமூகமும் துடித்துப்போனது. சமூகவலைதளங்களில் அவருக்கு இரங்கல் செய்திகள் பகிரப்பட்டதோடு, ஊனமுற்றோருக்கான நடுவண் ஆணையராக அவர் மேற்கொண்ட பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் நினைவுகூரப்பட்டன. முருகானந்தம் […]

Categories
announcements differently abled education important programs PTFB seminar viralmozhiyar

1 ஆகஸ்ட் 2020: இன்றைய முக்கிய நிகழ்வுகள்

நிகழ்வு 1:தேனி மாவட்டம் போடி நாயக்கனூரில் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் அவர்கள் வீட்டருகே வறுமையால் தாய், மாற்றுத்திறனாளி மகன் இருவர் தற்கொலை சம்பவம்! மாற்றுத்திறனாளிகள்உரிமைக்குரல் முகநூல் பக்கத்தில் குடும்பத்தினருடன் நேரடி விவாதம்! இன்று ஆகஸ்ட் 1, சனிக்கிழமை காலை 11 மணிக்கு. செவித்திறன் பாதித்த மாற்றுத்திறனாளிகள் காண சைகை மொழியும் உண்டு! நிகழ்வு 2:கோவை ஞானி அவர்களுக்கு பார்வையற்றோர் அமைப்புகளின் நினைவேந்தல்நாள் : 01.08.2020 சனிக் கிழமை.நேரம் : மாலை 05.45 மணி.ஜூம் அரங்கில் இணைவதற்கான தொடுப்பு […]