Categories
differently abled news important programs PTFB seminar thoughts

பார்வையற்ற முற்போக்குச் சிந்தனையாளர் பேரவையின் நான்காவது மாதாந்திர இணையவழிக் கருத்தரங்கம் 19 July-2020, நியாயிரு காலை 11 மணிக்கு!

19 ஜூலை, 2020

graphic zoom
தொலைக்காட்சி ஊடகங்களில் ஊனமுற்றோர் குறித்த பதிவுகள்.Zoom இணைப்பு:
https://us02web.zoom.us/j/83738267875
Meeting ID: 837 3826 7875

வணக்கம். பொது சமூகத்தில் ஊனமுற்றோர் குறித்த சரியான புரிதலை ஆழப்படுத்தி, பார்வையற்றோர் மற்றும் ஊனமுற்றோர் இடையே முற்போக்கு அரசியல், சமூக, பண்பாட்டு கருத்துக்களை விரிவாகக் கொண்டுசெல்வதை இலக்காகக் கொண்டு பார்வையற்ற முற்போக்குச் சிந்தனையாளர் பேரவை  செயல்பட்டு வருகிறது. எமது பேரவையின் நான்காவது மாதாந்திர இணையவழிக் கருத்தரங்கம் “தொலைக்காட்சி ஊடகங்களில் ஊனமுற்றோர் குறித்த பதிவுகள்” என்ற பொருண்மையில் எதிர்வரும் 19 July 2020 நியாயிரு காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
தொலைக்காட்சி ஊடகங்களின் செய்திகள், வர்த்தக நிகழ்ச்சிகள், தொடர்கள் போன்றவற்றில் ஊனமுற்றோர், அதிலும் குறிப்பாக பார்வையற்றோர், எவ்வாறு சித்தரிக்கவும் பிரதிநிதித்துவப் படுத்தவும் படுகிறார்கள், அத்தகைய சித்தரிப்புகளில் வெளிப்படும் சமூகப் பண்பாட்டு பொதுப் புத்தி, பிரதிநிதித்துவ அரசியல், அவற்றின் விளைவுகள் போன்றவற்றை விவாதிக்கும் இந்த மாதக் கருத்தரங்கில் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் துணைத்தலைவரும், பக்தவச்சலம் நினைவு மகளீர் கல்லூரியின் தமிழ் விரிவுரையாளருமான அரங்க ராஜா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அலுவலரும் வலைபக்கங்களில் தொடர்ந்து எழுதி வருபவருமான வினோத் சுப்ரமணியன் ஆகியோர் கருத்தாளர்களாகப் பங்கேற்று உரையாற்றுகின்றனர், பங்கேற்பாளர்களோடு உரையாடுகின்றனர். பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவையின் உ. மகேந்திரன் அறிமுக உரை வழங்க, கு. முருகானந்தன் நன்றியுரை வழங்குகிறார், க. கார்த்திக் கருத்தரங்கை ஒருங்கிணைக்கிறார்
ஊனமுற்றோர் உரிமைய்ச் செயல்பாட்டாளர்கள், பொதுவெளியில் ஊனமுற்றோர் பிரதிநிதித்துவம் குறித்தும்  சமூக மாற்றம் குறித்தும் அக்கறைகொண்டோர், ஊடக அரசியல் குறித்துச் சிந்திப்போர் என அனைவரையும் இக்கருத்தரங்கில் பங்கேற்றுப் பயன்பெறவும் பயனளிக்கவும் அன்புடன் அழைக்கிறோம்!
வாருங்கள், இணய வழியில் சந்திப்போம், சமூக மாற்றத்திற்கான கருத்துப் பரிமாற்றத்தில் நம்மை இணைத்துக்கொள்வோம்! தொடர்புக்கு: ptfb.tn@gmail.com, 9994988516.
சவால்முரசு: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.