Categories
ATM சட்டம் banking common voice disabled news rights

வங்கி மேலாளர்களே! உங்களுக்கு என்னதான் பிரச்சனை?

31 ஜூலை, 2020 ரவிக்குமார் இப்போதுதான் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஏடிஎம் வசதி கிடைக்கவில்லை என்ற ஒரு பார்வையற்றவரின் கதறலுக்குத் தீர்வுகிடைத்திருக்கிறது. மீண்டும் இன்னொரு குரல்; இந்தமுறை இந்தியன் வங்கியின் வாடிக்கையாளரிடமிருந்து. பூவிருந்தவல்லி பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பல ஆண்டுகள் பணியாற்றி, ஓய்வுபெற்ற ஆசிரியரான திரு. ரவிக்குமார் அவர்கள், உடல் மற்றும் பார்வைக்குறைபாடு எனஇரண்டு வகையான ஊனங்களால் பாதிக்கப்பட்டவர். தான் வங்கிக்குப் பணம் எடுக்க செல்வதற்கே தனக்கு இன்னொருவரின் துணை தேவைப்படும் நிலையில், வங்கியின் […]

Categories
achievers association statements differently abled commissioner examinations guidelines for scribe system P.K. Pincha scribe

ஆழ்ந்த இரங்கல்கள்

27 ஜூலை, 2020 P.K. பின்ச்சா P.K. பின்ச்சா (Pincha) என்றழைக்கப்படும் பிரசன்னக்குமார் பின்ச்சா ஒரு பார்வையற்றவராக இருந்தபோதிலும், பல்வேறு நடைமுறை மற்றும் மனவியல் சிக்கல்களையும் கடந்து, தனது கல்வியாலும், திட மனப்பான்மையாலும் அதிகார உச்ச பீடத்தை எட்டிப்பிடித்தவர். அத்தோடு தனது செயல்பாடுகளை அவர் நிறுத்திக்கொண்டவராக இருந்திருந்தால், இன்று அவருக்காக இந்திய பார்வையற்றோர் மற்றும் ஒட்டுமொத்த மாற்றுத்திறனாளிகள் சமூகம் கண்ணீர் வடித்துக்கொண்டிருக்க அவசியமில்லை. அஸ்ஸாம் மாநிலத்தில் பார்வையற்றோருக்காக ஒரு நிறுவனத்தைத் தொடங்கி, அதனை அரசுக்கு ஒப்படைக்கும்வரை அதன் […]

Categories
AICFB association statements differently abled news important programs seminar

திரைவாசிப்பான்கள் பயன்படுத்தி, சமூக ஊடகங்களைக் கையாள்வது எப்படி?” அறிந்துகொள்ள ஒரு பயிலரங்கு அனைவரும் வாருங்கள்!

24 ஜூலை, 2020 அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பு (All India Confederation of the Blind) இணைய வெளி கருத்தரங்கம் குறிப்பு : இக்கருத்தரங்கம் தமிழில் மட்டுமே நடத்தப்படும். பார்வையற்றோரின் உரிமைக் குரலை உடனுக்குடன் ஒலிக்கச் செய்ய இயலுமா? பார்வையற்றோரின் திறமைகளை இந்த சமுதாயத்தில் பறைசாற்ற முடியுமா? இதுபோன்று தங்களுக்கு எழும் ஐயங்களைத் தெளிவுப்படுத்திக்கொள்ள  24.07.2020 வெள்ளிக் கிழமை காலை 11.00 மணி அளவில் அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பால் “திரைவாசிப்பான் மூலம் சமூக ஊடகங்களை […]

Categories
achievers differently abled education differently abled news naveenkumar results scribe

அதிகம் படிக்க ஆசை இருக்கு, வழிகாட்டுங்களேன்!

20 ஜூலை, 2020 நவீன்குமார் விருதுநகர் மாவட்டம் ஜோகில்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்புப் படித்த உடல்ச்சவால் மாற்றுத்திறனாளியான நவீன்குமார், அரசுப் பொதுத்தேர்வில் 600க்கு 572 மதிப்பெண்கள் பெற்று சாதனைபடைத்திருக்கிறார். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம் கல்குறிச்சிக்கு அருகில் இருக்கிறது தோணுகால் கிராமம். அந்த கிராமத்தில் வசிக்கும் சரவணபாண்டி  நாகரத்தினம் தம்பதியின் மூத்தமகனான நவின்குமார், ஏழு மாதக் குழந்தையாகப் பிறந்தார். இதன் காரணமாக, வலது கால் மற்றும் வலது கை செயலிழந்ததோடு, பேச்சுத்திறனிலும் பாதிப்பு ஏற்பட்டது. தனது […]

Categories
agitation association statements banking differently abled news

“பார்வையற்றோர் வங்கிக் கணக்கு வைத்திருப்பது சட்டவிரோதம்” வங்கி மேலாளரின் அராஜகப் பேச்சு, போராட்டம் நடத்தப்போவதாக டாராடாக் அறிவிப்பு

19 ஜூலை, 2020 அஷோக்பாலா என்கிற ஐயப்பன் திருவாரூர் மாவட்டம் திருத்தரைப்பூண்டி வட்டம் பாண்டிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் அஷோக்பாலா என்கிற ஐயப்பன். பார்வை மாற்றுத்திறனாளியான இவர், தான் கணக்கு வைத்திருக்கும் திருத்தரைப்பூண்டி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாளர், தன்னைப் பிற வங்கி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில், மிகக் கடுமையாகவும், தரக்குறைவாகத் திட்டியதோடு, பார்வையற்றவர்கள் வங்கிக்கணக்கு வைத்திருப்பதே சட்டப்படி தவறு” என கண்டபடி பேசியதாக ஒரு வாட்ஸ் ஆப் குரல்ப்பதிவை வெளியிட்டிருந்தார். இதனையடுத்து, தொடர்புடைய வங்கி மேலாளரின் […]

Categories
differently abled news important programs PTFB seminar thoughts

பார்வையற்ற முற்போக்குச் சிந்தனையாளர் பேரவையின் நான்காவது மாதாந்திர இணையவழிக் கருத்தரங்கம் 19 July-2020, நியாயிரு காலை 11 மணிக்கு!

19 ஜூலை, 2020 தொலைக்காட்சி ஊடகங்களில் ஊனமுற்றோர் குறித்த பதிவுகள்.Zoom இணைப்பு:https://us02web.zoom.us/j/83738267875Meeting ID: 837 3826 7875 வணக்கம். பொது சமூகத்தில் ஊனமுற்றோர் குறித்த சரியான புரிதலை ஆழப்படுத்தி, பார்வையற்றோர் மற்றும் ஊனமுற்றோர் இடையே முற்போக்கு அரசியல், சமூக, பண்பாட்டு கருத்துக்களை விரிவாகக் கொண்டுசெல்வதை இலக்காகக் கொண்டு பார்வையற்ற முற்போக்குச் சிந்தனையாளர் பேரவை  செயல்பட்டு வருகிறது. எமது பேரவையின் நான்காவது மாதாந்திர இணையவழிக் கருத்தரங்கம் “தொலைக்காட்சி ஊடகங்களில் ஊனமுற்றோர் குறித்த பதிவுகள்” என்ற பொருண்மையில் எதிர்வரும் 19 […]

Categories
accessibility disabled news education oviya unicode

நிஜத்தாரகை ஓவியா

31 ஜூலை, 2020 ஓவியா பெருமிதம் என்கிற வார்த்தைக்கெல்லாம் அர்த்தம் தெரியாத அந்த வயதில், கை வலிக்க வலிக்க, பிரெயிலில் எனக்கான தேர்வினை நானே எழுதினேன். ஒருபோதும் அது எனக்கு சுமையாகவோ, வலியாகவோ, ஏன் பெருமிதமாகவும்கூட உறைத்ததே இல்லை. ஆனால், சிறப்புப் பள்ளியை விட்டு, சாதாரணப்பள்ளிக்கு இடம் பெயர்ந்து, ஒன்பதாம் வகுப்பின் முதல் இடைத்தேர்வினை நான் சொல்லச் சொல்ல ஒருவர் எழுதும் தருணம் வாய்த்தபோதே என் இழப்பை உணர்ந்தேன். அப்போதிலிருந்து நான் இறுதியாக எழுதிய முதுநிலைப் பட்டயத் […]

Categories
braille education braille education in general schools differently abled education examinations results scribe special schools

+2 தேர்வு முடிவுகள் – மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கூடுதல் கட்டமைப்பு வசதிகளை உருவாக்க கோரிக்கை

17 ஜூலை, 2020 நம்புராஜன் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் சுமார் 2835 மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகின. இறுதித் தேர்வினை எழுதாத 34 ஆயிரம் மாணவர்களில் எத்தனை மாற்றுத்திறனாளி மாணவர்கள் இருக்கிறார்கள் எனத் தெரியவில்லை.இந்நிலையில், தேர்வு முடிவு வெளியான 520 பார்வைத்திறன் குறையுடைய மாணவர்களில் 497 பேரும், 592 செவித்திறன் குறையுடைய மாணவர்களில் 486 மாணவர்களும் வெற்றிபெற்றனர். 983 உடல்ச்சவால் மாற்றுத்திறனாளிகளில் 860 பேர் மற்றும் 740 இதர மாற்றுத்திறனாளிகளில் […]

Categories
braille education differently abled education differently abled news differently abled teacher examinations kaviya results scribe special schools

600க்கு 571, “ஐஏஎஸ் எனது வாழ்நாள் கனவு” அடித்துச் சொல்கிறார் காவியா

16 ஜூலை, 2020 மாணவி காவியா தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இயங்கிவருகிறது திருச்சி பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி. இன்று வெளியான பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் அந்தப் பள்ளி நூறு விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளது. அந்தப் பள்ளியில் தங்கிப்பன்னிரண்டாம் வகுப்பு படித்த  நாமக்கல் மாவட்டம் குமாரபாளயத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணனின் மகள் காவியா 600 மதிப்பெண்களுக்கு  571 மதிப்பெண்கள் எடுத்து சாதனைபடைத்துள்ளார். ஆறு பாடங்களிலுமே தொன்னூறுக்கு மேல் பெற்றுள்ள காவியா, தமிழில் 98, வரலாறு […]

Categories
corona corona assistance gomathi kuppusami livelihood praveena varatharajan society

அன்பு மனங்களின் ஆழம்

31 ஜூலை, 2020 கோமதி குப்புசாமி தனது மேல்நிலைக் கல்வியின் இறுதி நாட்களில் அந்தப் பெண்ணுக்கு ஒரு அழைப்பு வருகிறது. தன்னார்வ வாசிப்பாளராக ஒருமணி நேரம் வந்துவிட்டுப் போகவேண்டும். சரி போகலாம் என்று புறப்பட்டவர்தான் இன்னும் திரும்பவே இல்லை. அவர்தான் செல்வி கோமதி குப்புசாமி. பள்ளி கல்லூரிகளில் படித்துக்கொண்டிருக்கும் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு வாசிப்பாளராகத் தொடங்கிய தனது பயணத்தை அவர் சேவை என்று சொல்லி சுருக்கிக்கொள்ள விரும்பவில்லை. உண்மையில் பார்வையிழப்பு என்கிற தாங்கள் செய்யாத ஒரு பிழைக்காக அவர்கள் […]