Categories
association letters association statements corona differently abled education examinations guidelines for scribe system scribe special schools

“பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்விலிருந்து மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விலக்கு வழங்குக” முதல்வருக்கு டாராடாக் கடிதம்

     CBSE சுற்றறிக்கையினைப் பின்பற்றி, பொதுத்தேர்வு எழுதவுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டுமென முதல்வருக்கு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. “தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை மற்றும் அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் அறிவித்துள்ள 10,11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை முழுமையாகவோ அல்லது மாற்றுத்திறன் குழந்தைகளுக்காவது ரத்து செய்து , அனைவரையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கக் கோரி எமது சங்கத்தின் சார்பில் ஜுன் –1 தேதியிட்டு ஏற்கனவே மனு அனுப்பப்பட்டுள்ளது.  பதிலி […]

Categories
agitation association letters association statements corona differently abled news Govt. policies affected differently abled

மாற்றுத்திறனாளிகளுக்கு ஊரடங்கு கால நிவாரணம் மாதம் ரூ.5000/- ஜுன்-10 முதல் கோரிக்கை நிறைவேறும் வரை மாநிலம் முழுவதும் போராட்டம்! மாற்றுத்திறனாளிகள் கூட்டு இயக்கம் அறிக்கை

 மாற்றுத்திறனாளிகளுக்கு ஊரடங்கு காலத்தில் குறைந்தபட்சம் ரூ. 5000 வழங்க வேண்டுமென வலியுறுத்தி, கோரிக்கை நிறைவேறும்வரை காலவரையற்ற போராட்டத்தை முன்னெடுக்கவிருப்பதாக மாற்றுத்திறனாளி சங்கங்களின் கூட்டு இயக்கம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  “கொரோனா பேரிடர் ஊரடங்கு 5 – வது முறையாக ஜுன் -30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்னும் எவ்வளவு காலம் நீட்டிக்கப்படும் என்பதும் தெரியவில்லை. கடந்த இரண்டரை மாதங்களாக ஏற்கனவே கிடைத்து வந்த குறைந்தபட்ச வருவாய்களைக்கூட இழந்து , மாற்றுத்திறனாளிகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர். மருந்து […]