Categories
corona differently abled commissioner differently abled department differently abled news

மருந்து தட்டுப்பாட்டைப் போக்க மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் முயற்சி: ஹாங்காங் மற்றும் துபாயிலிருந்து தருவிக்கப்பட்டன மாத்திரைகள்

ஜூன் 18, 2020

graphic விகாபத்ரின் மாத்திரைகள்
நன்றி தி இந்து ஆங்கிலம்:
குழந்தைகளுக்கு ஏற்படும் திடீர் வலிப்பு மற்றும் கால்கை வலிப்பு நோய்களைக் கட்டுப்படுத்தும் விகாபத்ரின் மாத்திரைகளுக்குத் தற்போதைய ஊரடங்கு காரணமாக, தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனைப் பத்திரிக்கை செய்திகளும் பல மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோரும் உறுதிசெய்தனர்.

இதையடுத்து, தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை முயற்சியால், பல்துறை ஒத்துழைப்போடு, சுமார் எட்டு லட்சம் செலவில் 3400 விகாபத்ரின் மாத்திரைகள் தருவிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக தமிழக அரசின் சார்பில் மத்திய அரசு மற்றும் இந்திய அரசின் வெளிநாட்டு தூதரகங்களுக்குக்கடிதம் எழுதப்பட்டது.  தமிழ்நாடு அரசு மருந்துகள் சேவை நிறுவனம் இந்த மாத்திரைகளை ஹாங்காங் மற்றும் துபாயிலிருந்து பெற்றது. ஏர் இந்தியா எக்ஸ்ப்ரஸ் உதவியுடன் உரிய நேரத்தில் மருந்துகள் வரவழைக்கப்பட்டன என மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தெரிவித்துள்ளது. மண்டல பாஸ்போட் அலுவலர் அஷோக்பாபு மருந்துகளின் முதல் தொகுதியை சமூகநலத்துறை அமைச்சர் திருமதி. சரோஜா அவர்களிடம் வழங்கினார்.

 சவால்முரசு: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.